Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/உலகம்/ ஜெலன்ஸ்கியின் விமானப் பாதையை வேவு பார்த்த டிரோன்கள்; குறிவைத்ததா ரஷ்யா?

ஜெலன்ஸ்கியின் விமானப் பாதையை வேவு பார்த்த டிரோன்கள்; குறிவைத்ததா ரஷ்யா?

ஜெலன்ஸ்கியின் விமானப் பாதையை வேவு பார்த்த டிரோன்கள்; குறிவைத்ததா ரஷ்யா?

ஜெலன்ஸ்கியின் விமானப் பாதையை வேவு பார்த்த டிரோன்கள்; குறிவைத்ததா ரஷ்யா?

Latest Tamil News
டப்லின்: அயர்லாந்து சென்ற உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் விமானப் பாதையை 5 டிரோன்கள் வேவு பார்த்ததாக அயர்லாந்தின் கடற்படை தெரிவித்துள்ளது.

நேட்டோ எனப்படும் சர்வதேச நாடுகளின் ராணுவ கூட்டமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ரஷ்யா கடந்த 2022 பிப்ரவரியில் போரை துவங்கியது. முயற்சித்தது.

நான்கு ஆண்டுகளை நெருங்கும் இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் முயற்சிகளை மேற்கொண்டார். 28 அம்சங்களைக் கொண்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை முன்மொழிந்தும் போர் நின்றபாடில்லை. உக்ரைனின் முக்கிய நகரங்களை ரஷ்யா கேட்டுள்ளது. இதனால், இந்த ஒப்பந்தத்தில் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.

இதனிடையே, அரசு முறை பயணமாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, விமானம் மூலமாக அயர்லாந்து சென்றிருந்தார். அப்போது, அவரது விமானப் பாதையை 5 டிரோன்கள் வேவு பார்த்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை அயர்லாந்து கடற்படை உறுதி செய்துள்ளது.

விமானப் பாதையை இடைமறிக்கும் முயற்சியாக இந்த டிரோன்களை அனுப்பியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

கடந்த சில தினங்களாக ஐரோப்பா நாடுகளை டிரோன்கள் அச்சுறுத்தி வந்த நிலையில், இது ரஷ்யாவின் வேலையாகத்தான் இருக்கும் என்று உலக நாடுகளின் தலைவர்கள் குற்றம்சாட்டி வந்தனர். இந்த சூழலில், உக்ரைன் அதிபர் அயர்லாந்து சென்ற நிலையில், அங்கும் டிரோன்கள் மூலம் அச்சுறுத்தல்கள் ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us