ஈரானில் மாயமான இந்தியர்கள் மூன்று பேர்; தேடுதல் பணி தீவிரம்
ஈரானில் மாயமான இந்தியர்கள் மூன்று பேர்; தேடுதல் பணி தீவிரம்
ஈரானில் மாயமான இந்தியர்கள் மூன்று பேர்; தேடுதல் பணி தீவிரம்
ADDED : மே 28, 2025 05:06 PM

தெஹ்ரான்: ஈரானில் மாயமான இந்தியர்கள் மூன்று பேரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது என அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்து உள்ளது.
பஞ்சாபின் சங்ரூர், ஹோஷியார்பூர் மற்றும் எஸ்.பி.எஸ்., நகர் ஆகிய இடங்களிலிருந்து ஈரானுக்கு இந்தியர்கள் மூன்று பேர் சென்றுள்ளனர். அங்கு மூன்று பேரும் காணாமல் போகினர். ஹுஷன்பிரீத் சிங், ஜஸ்பால் சிங், அம்ரித்பால் சிங் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து ஈரான் நாட்டில் உள்ள இந்திய தூதரகத்துக்கு தகவல் கிடைத்தது. பின்னர் ஈரான் நாட்டு அதிகாரிகளுடன் இணைந்து இந்திய தூதரக அதிகாரிகள் தேடும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
இது குறித்து ஈரான் நாட்டில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஈரானுக்கு வந்திருந்த இந்தியர்கள் மூன்று பேர் மாயமாகி உள்ளனர்.அவர்களைக் கண்டுபிடிக்கும் பணிகள் முழு முயற்சியுடன் நடைபெற்று வருகிறது.
இது தொடர்பாக அவர்களின் குடும்பத்தினருக்கு தகவல் கொடுத்துள்ளோம்.நாங்கள் அவர்களுடன் தொடர்பில் இருக்கிறோம். உடனுக்குடன் அவர்களது குடும்பத்தினருக்கு தகவல் கொடுத்து வருகிறோம்.
காணாமல் போன இந்தியர்களை அவசரமாகக் கண்டுபிடித்து அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என ஈரான் நாட்டு அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் இந்தியர்கள் மூன்று பேர் மாயமாகியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.