வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா: ஆட்சியை பிடித்தது ராணுவம்
வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா: ஆட்சியை பிடித்தது ராணுவம்
வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா: ஆட்சியை பிடித்தது ராணுவம்

பள்ளி, கல்லூரிகள் மூடல்
அனைத்து பள்ளி, கல்லுாரிகள் மற்றும் பல்கலைக்கழங்கள் மூடப்பட்டன. சமூக வலைதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நடந்த வன்முறையில் பொது சொத்துக்கள் சேதமடைந்தன. பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலக கோரி மாணவர்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தினர். இன்று ஷேக் ஹசீனா பிரதமர் பதவியில் இருந்து விலகினார். அவர், டாக்காவை விட்டு வெளியேறி விட்டதாக கூறப்படுகிறது. தனது சகோதரி ஷேக் ரிஹானாவுடன் சேர்ந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் பாதுகாப்பான இடத்திற்கு சென்றுவிட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன.
முற்றுகை
பிரதமர் அலுவலக உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், வன்முறை வெடித்ததும், பிரதமர் இல்லத்தில் இருந்து ஷேக் ஹசீனா வெளியேறிவிட்டார். தற்போது அவர் எங்கு உள்ளார் எனத் தெரியவில்லை. டாக்காவில் நிலைமை பதற்றமாக உள்ளது. போராட்டக்காரர்கள் பிரதமர் இல்லத்தை முற்றுகையிட்டு உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
சூறை
சிலை உடைப்பு
ஷேக் ஹசீனா பதவி விலகியதைத் தொடர்ந்து மாணவர்கள் மற்றும் போராட்டக்காரர்கள் வெற்றி பேரணியில் ஈடுபட்டனர். அப்போது, அந்நாட்டின் தந்தையும், முன்னாள் அதிபருமான முஜிபுர் ரஹ்மானின் சிலைகளை போராட்டக்காரர்கள் உடைத்தனர். இவரின் மகள் தான் ஷேக் ஹசீனா என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லையில் தீவிர கண்காணிப்பு
ஷேக் ஹசீனா பதவி விலகி உள்ள நிலையில், வங்க தேச எல்லையை ஒட்டிய பகுதிகளை இந்திய பாதுகாப்பு படையினர் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.