ஒலிம்பிக் 100 மீட்டர் ஓட்டம்; கார்ல் லீவிஸ், உசேன் போல்ட் வரிசையில் நோஹா லைலெஸ்!
ஒலிம்பிக் 100 மீட்டர் ஓட்டம்; கார்ல் லீவிஸ், உசேன் போல்ட் வரிசையில் நோஹா லைலெஸ்!
ஒலிம்பிக் 100 மீட்டர் ஓட்டம்; கார்ல் லீவிஸ், உசேன் போல்ட் வரிசையில் நோஹா லைலெஸ்!

100 மீட்டர் ஓட்டம்
பாரிஸ் ஒலிம்பிக் போட்டி கடந்த மாதம் 26ம் தேதி துவங்கி ஆக.,11ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தத் தொடர் முடிய இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில், புள்ளிப்பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது. இதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் நோஹா லைலெஸ். இவர் நடந்து முடிந்த 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 9.784 வினாடிகளில் இலக்கை அடைந்து தங்கம் வென்றுள்ளார். இவர் 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் இதே பிரிவில் வெண்கலம் வென்றிருந்தார்.
கார்ல் லீவிஸ்
100 மீட்டர் ஓட்டத்தில் புதுப்புது வீரர்கள் அறிமுகமானாலும், சிலர் மட்டுமே புகழின் உச்சிக்கு செல்கின்றனர். அந்தவகையில், 1984ல் மிகவும் பிரபலமான ஓட்டப்பந்தய வீரராக வலம் வந்தவர் கார்ல் லீவிஸ். ஒலிம்பிக் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்திய இவர், 9 தங்கம், ஒரு வெள்ளி என மொத்தம் 10 பதக்கங்களை வென்றுள்ளார். அதில் 1984, 1988 ஒலிம்பிக் போட்டிகளில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்றுள்ளார்.
உசேன் போல்ட்
இவருக்கு அடுத்தபடியாக, ஒலிம்பிக்கில் ஓட்டப்பந்தயத்தில் கொடிகட்டி பறந்தவர் ஜமைக்காவின் உசேன் போல்ட். 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் இதுவரையில் இவரது சாதனையை யாராலும் முறியடிக்க முடியவில்லை.
டோக்கியோ
2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் இத்தாலியைச் சேர்ந்த மார்செல் ஜேகப்ஸ் 9.80 வினாடிக்குள் இலக்கை எட்டினார்.