பிரான்ஸ் பார்லி., தேர்தல்: எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை
பிரான்ஸ் பார்லி., தேர்தல்: எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை
பிரான்ஸ் பார்லி., தேர்தல்: எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை
ADDED : ஜூலை 08, 2024 01:37 PM

பாரிஸ்: பிரான்ஸ் பார்லிமென்டிற்கு நடந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அங்கு தொங்கு பார்லிமென்ட் அமைந்துள்ளது.
பிரான்சில் அதிபர் ஆட்சி முறை நடைமுறையில் உள்ளது. 577 இடங்களை கொண்ட அந்நாட்டு பார்லிமென்டிற்கு ஜூன் 30 மற்றும் ஜூலை 7 ம் தேதிகளில் தேர்தல் நடந்தது. மெஜாரிட்டிக்கு 289 இடங்களில் வெற்றி பெற வேண்டும். முதல் கட்டமாக நடந்த தேர்தலில், வலதுசாரி கூட்டணி முன்னிலை பெற்றது. இதனால், அக்கூட்டணி ஆட்சியை கைப்பற்றும் என கணிக்கப்பட்டது. ஆனால், இரண்டாம் கட்ட தேர்தல் முடிந்த பிறகு நிலைமை மாறியது.
ஆனால், பிரான்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி, பிரான்ஸ் சோசியலிஸ்ட் கட்சி, பசுமை அரசியல் கட்சி ஆகியன அடங்கிய இடதுசாரி கூட்டணி 180 இடங்களையும், அதிபர் மேக்ரானின் சென்ட்ரிஸ்ட் கட்சி 160 இடங்களையும், வலதுசாரி கூட்டணி 140 இடங்களையும் பெற்றுள்ளன. எந்த கட்சிக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை. இதனையடுத்து அங்கு தொங்கு பார்லிமென்ட் அமைந்து உள்ளது.