தமிழகத்தில் அரசியல் தலைவர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல்: இ.பி.எஸ்.,
தமிழகத்தில் அரசியல் தலைவர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல்: இ.பி.எஸ்.,
தமிழகத்தில் அரசியல் தலைவர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல்: இ.பி.எஸ்.,
ADDED : ஜூலை 08, 2024 01:47 PM

சென்னை: ‛‛ தமிழகத்தில் அரசியல் தலைவர்கள், பொது மக்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது '' என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., கூறியுள்ளார்.
சேலம் மாவட்டம் ஓமலூரில் நிருபர்களிடம் இ.பி.எஸ்., கூறியதாவது: அ.தி.மு.க.,வில் இருந்து ஓ.பி.எஸ்., நீக்கப்பட்டு விட்டார். அவரை பற்றி பேச ஒன்றும் இல்லை.
மாறாது
போலீஸ் அதிகாரியை மாற்றுவதால் எதுவும் மாறிவிடாது. தி.மு.க., ஆட்சியில் போலீசார் சுதந்திரமாக செயல்பட முடிவில்லை. கொலை நடக்காத நாளே இல்லை. பொது மக்கள், அரசியல் தலைவர்கள் என அனைவருக்கும் பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுகிறது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என குடும்பத்தினர் கூறுகின்றனர். அவர்களின் சந்தேகத்தை போக்க வேண்டியது அரசின் கடமை.
முதல்வர் சிறப்பாக செல்பட்டு இருந்தால் சட்டம் ஒழுங்கு காக்கப்பட்டு இருக்கும். மாநிலத்தில் ரவுடிகளின் ராஜ்ஜியமாக உள்ளது.
பாகம் பிரிக்கிற சண்டையினால் தான் கோவை மேயர் ராஜினாமா என கருதுகிறேன். அவர்கள் இடையே ஒற்றுமை இல்லை. எந்தெந்த துறைகளில் எப்படி கொள்ளை அடிக்கலாம் என்பது மட்டும் தான் ஆட்சியின் திட்டம். உள்ளாட்சி துறை படுபாதாளத்திற்கு போய்விட்டது. இவ்வாறு இ.பி.எஸ்., கூறினார்.