Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/உலகம்/ நியூயார்க் - கலிபோர்னியா வரை பல நகரங்களுக்கு பரவிய போராட்டம்

நியூயார்க் - கலிபோர்னியா வரை பல நகரங்களுக்கு பரவிய போராட்டம்

நியூயார்க் - கலிபோர்னியா வரை பல நகரங்களுக்கு பரவிய போராட்டம்

நியூயார்க் - கலிபோர்னியா வரை பல நகரங்களுக்கு பரவிய போராட்டம்

Latest Tamil News
ஆஸ்டின்: அமெரிக்காவில் புலம்பெயர்ந்தோரை கண்டுபிடித்து வெளியேற்றும் குடியேற்ற அமலாக்கத் துறையை கண்டித்தும், லாஸ் ஏஞ்சலசில் அதிரடிப்படை போலீசார் மற்றும் ராணுவத்தினர் குவிக்கப்பட்டதற்கு எதிராகவும் நடந்து வரும் போராட்டம், நாட்டின் பல முக்கிய நகரங்களுக்கும் பரவியது.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் அதிகளவில் புலம்பெயர்ந்தோர் வசிக்கின்றனர். அவர்களில் லட்சக்கணக்கானோரிடம் முறையான ஆவணங்கள் இல்லை. கடந்த 6ம் தேதி அங்கு சோதனை நடந்தது. அதில் சட்டவிரோதமாக தங்கியிருந்த நுாற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இதைக் கண்டித்து துவங்கிய போராட்டம் கலவரமாக மாறியது. அதை அடக்க 4,000 அதிரடிப்படை போலீசார், 700 ராணுவத்தினரை அனுப்ப அதிபர் டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டார். போராட்டத்தில் ஈடுபட்ட ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், இந்தப் போராட்டம் நாட்டின் பல முக்கிய நகரங்களுக்கும் பரவியுள்ளது.

சியாட்டில், நியூயார்க், சான்பிரான்சிஸ்கோ, சிகாகோ, டென்வர், பிலடெல்பியா ஆகிய நகரங்களில் குடியேற்ற அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு முன் நுாற்றுக்கணக்கானோர் திரண்டனர்.

பெரும்பாலான இடங்களில் அமைதியான முறையிலேயே போராட்டம் நடந்தது. இந்த போராட்டம் வார இறுதி நாட்களில் மேலும் சில நகரங்களுக்கு பரவக்கூடும் என போலீசார் கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us