Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/உலகம்/இஸ்ரேலுக்கு தரவுகள் கசிவா; வாட்ஸ் அப் செயலியை நீக்குமாறு மக்களுக்கு ஈரான் உத்தரவு

இஸ்ரேலுக்கு தரவுகள் கசிவா; வாட்ஸ் அப் செயலியை நீக்குமாறு மக்களுக்கு ஈரான் உத்தரவு

இஸ்ரேலுக்கு தரவுகள் கசிவா; வாட்ஸ் அப் செயலியை நீக்குமாறு மக்களுக்கு ஈரான் உத்தரவு

இஸ்ரேலுக்கு தரவுகள் கசிவா; வாட்ஸ் அப் செயலியை நீக்குமாறு மக்களுக்கு ஈரான் உத்தரவு

ADDED : ஜூன் 18, 2025 08:10 AM


Google News
Latest Tamil News
டெஹ்ரான்; தங்கள் நாட்டு குடிமக்கள் அனைவரும் வாட்ஸ் அப்பை நீக்க வேண்டும் என்று ஈரான் உத்தரவிட்டுள்ளது.

ஈரான், இஸ்ரேல் நாடுகளுக்கும் இடையேயான போர் கடந்த 13ம் தேதி தொடங்கியது. ஈரான் அணுசக்தி நிலையங்கள், ராணுவ நிலைகளை குறி வைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. பதிலுக்கு ஈரானும் இஸ்ரேல் மீது தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.

இருநாடுகளின் இடையேயான போர் உலக நாடுகளை கவலை கொள்ள செய்துள்ளது. ஈரான் மீது இஸ்ரேல் முரட்டுத்தனமாக தாக்குதல் நடத்தி வருவதாக அரபு, இஸ்லாமிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந் நிலையில், இஸ்ரேலுடன் மோதல் உச்சக்கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளதால், ஈரான் தமது குடிமக்களை தங்கள் செல்போன்கள் மற்றும் இன்னபிற எலக்ட்ரானிக் சாதனங்களில் இருந்து வாட்ஸ் அப்பை நீக்குமாறு வலியுறுத்தி உள்ளது. ஈரான் அரசு தொலைக்காட்சியில் இவ்வாறு வலியுறுத்தல் வெளியிடப்பட்டது.

ஈரானில் இருந்து பகிரப்படும் தகவல்கள் அனைத்தும் இஸ்ரேலுக்கு பகிர அல்லது அனுப்பப்படுவதாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் இப்படி ஒரு அறிவிப்பு பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளது.

ஆனால், ஈரான் அரசின் இந்த வலியுறுத்தலை, உத்தரவை வாட்ஸ் அப் நிறுவனம் புறம் தள்ளிவிட்டது. வாட்ஸ் அப்பை நீக்குமாறு ஈரான் கூறியதை வாட்ஸ் அப் நிறுவனம் உறுதியாக மறுத்துள்ளது. இதுபோன்ற தவறான தகவல்கள் தங்களின் சேவைகளை பாதிக்கும், பயனர்களின் தனியுரிமையை பாதுகாப்பது எங்களின் கடமை என்றும் கூறி உள்ளது.

மேலும், யார், யாருக்கு என்ன செய்திகள் அல்லது குறிப்புகள் அனுப்புகின்றனர், தனிப்பட்ட தகவல் பரிமாற்றங்களை கண்காணிக்க மாட்டோம் என்று உறுதி அளித்துள்ளது. எந்த அரசாங்கத்துக்கும் இந்த தகவல்களை பகிர்வது இல்லை என்றும் கூறி உள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us