பணியாளருக்கு சித்திரவதை: ஹிந்துஜா குடும்பத்தினருக்கு சிறை தண்டனை: ஸ்விஸ் நீதிமன்றம் அதிரடி
பணியாளருக்கு சித்திரவதை: ஹிந்துஜா குடும்பத்தினருக்கு சிறை தண்டனை: ஸ்விஸ் நீதிமன்றம் அதிரடி
பணியாளருக்கு சித்திரவதை: ஹிந்துஜா குடும்பத்தினருக்கு சிறை தண்டனை: ஸ்விஸ் நீதிமன்றம் அதிரடி

குற்றச்சாட்டு
பிரிட்டனில் வசித்து வரும் இந்திய வம்சாவளியான கோபிசந்த் ஹிந்துஜா, வங்கி, எண்ணெய், வர்த்தகம் உட்பட பல்வேறு தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இவரின் சகோதரர்களில் ஒருவரான பிரகாஷ், ஹிந்துஜா குழுமத்தின் பல்வேறு பணிகளை கவனித்து வருகிறார்.
தண்டனை
இது தொடர்பான வழக்கு ஜெனிவாவில் உள்ள நீதிமன்றத்தில் நடந்தது. விசாரணையில், ஆட்கடத்தல் வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம், இந்திய பணியாளர்களை கொடுமைப்படுத்திய வழக்கில், அவர்கள் மீதான குற்றச்சாட்டை உறுதி செய்ததுடன், பிரகாஷ் மற்றும் கமல் ஹிந்துஜாவுக்கு தலா 4.6 ஆண்டு சிறை தண்டனையும், அஜய் மற்றும் நம்ரதா ஆகியோருக்கு தலா 4 ஆண்டு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. தீர்ப்பு வழங்கப்பட்ட போது இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதாக ஹிந்துஜா தரப்பு வழக்கறிஞர் கூறியுள்ளார்.