பிரான்ஸ் புதிய பிரதமராக லெகுர்னு நியமனம்
பிரான்ஸ் புதிய பிரதமராக லெகுர்னு நியமனம்
பிரான்ஸ் புதிய பிரதமராக லெகுர்னு நியமனம்
ADDED : செப் 10, 2025 03:39 AM

பாரிஸ் : பிரான்சின் புதிய பிரதமராக ஜெபஸ்டியன் லெகுர்னுவை நியமித்து அதிபர் இமானுவேல் மேக்ரான் உத்தரவிட்டுள்ளார்.
ஐரோப்பிய நாடான பிரான்சின் பிரதமராக இருந்த பிரான்சுவா பேய்ரூ தாக்கல் செய்த பட்ஜெட், பல தரப்பினரையும் அதிருப்தி அடைய செய்தது.
இதனால் முடங்கிய பட்ஜெட் திட்டத்தை நிறைவேற்ற, பார்லிமென்டின் ஆதரவை பெற நம்பிக்கை ஓட்டெடுப்புக்கு பேய்ரூ அழைப்பு விடுத்தார். நேற்று முன்தினம் நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பில் அவர் தோல்வி அடைந்ததை அடுத்து அவரது அரசு கவிழ்ந்தது. இதையடுத்து மீண்டும் தேர்தல் நடத்துவதை தவிர்க்க, அதிபர் மேக்ரான் புதிய பிரதமரை நேற்று அறிவித்தார்.
இதையடுத்து நாட்டின் தற்போதைய ராணுவ அமைச்சராக உள்ள ஜெபஸ்டியன் லெகுர்னுவை, 39, புதிய பிரதமராக நியமித்து அதிபர் இமானுவேல் மேக்ரான் நேற்று உத்தரவிட்டார்.
இதன் வாயிலாக, பிரான்ஸ் நாட்டில் ஒரே ஆண்டில் தேர்வு செய்யப்பட்ட நான்காவது பிரதமராக லெகுர்னு திகழ்கிறார்.