உக்ரைன் மோதலுக்கு காரணம்: ஷாங்காய் மாநாட்டில் மேற்கத்திய நாடுகள் மீது புடின் பாய்ச்சல்
உக்ரைன் மோதலுக்கு காரணம்: ஷாங்காய் மாநாட்டில் மேற்கத்திய நாடுகள் மீது புடின் பாய்ச்சல்
உக்ரைன் மோதலுக்கு காரணம்: ஷாங்காய் மாநாட்டில் மேற்கத்திய நாடுகள் மீது புடின் பாய்ச்சல்
ADDED : செப் 01, 2025 12:48 PM

தியான்ஜின்: உக்ரைன் மோதலுக்கு மேற்கத்திய நாடுகள் தான் காரணம் என ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் ரஷ்ய அதிபர் புடின் பேசுகையில் தெரிவித்தார்.
சீனாவின் தியான்ஜின் நகரில் நகரில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் புடின் பேசியதாவது: உக்ரைனை நேட்டோ அமைப்பில் இணைக்க மேற்கு நாடுகள் தொடர்ந்து முயற்சிப்பது உக்ரைன் மோதலுக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாகும்.
நாங்கள் மீண்டும் மீண்டும் வலியுறுத்தியபடி, இது ரஷ்யாவின் பாதுகாப்பிற்கு நேரடி அச்சுறுத்தலாக அமைகிறது. 2014ம் ஆண்டு உக்ரைனில் நடந்த ஆட்சிக் கவிழ்ப்பு, மேற்கத்திய நாடுகளில் தூண்டுதலின் பேரில் நடந்தது. இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் சீன அதிபர் ஜி ஜின்பிங் நடத்திய விருந்தில் அவர் கலந்து கொண்டார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் போர் நிறுத்தத்தை ஏற்படுத்த மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்தது.
ரஷ்யாவின் எண்ணெய் வாங்குவதற்கு இந்தியா மீது கடுமையான வரிகளை விதித்து அழுத்தம் கொடுத்தது ஆகியவை குறித்து முக்கிய ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.