பிரதமர் மோடி-ரஷ்ய அதிபர் புடின் நேருக்கு நேர் சந்திப்பு; பேசியது என்ன?
பிரதமர் மோடி-ரஷ்ய அதிபர் புடின் நேருக்கு நேர் சந்திப்பு; பேசியது என்ன?
பிரதமர் மோடி-ரஷ்ய அதிபர் புடின் நேருக்கு நேர் சந்திப்பு; பேசியது என்ன?
ADDED : செப் 01, 2025 12:52 PM

தியான்ஜின்: இந்தியா மற்றும் ரஷ்யாவின் நெருங்கிய உறவானது உலக அமைதிக்கு முக்கியமானது என ரஷ்ய அதிபர் புடினை சந்தித்து பேசும் போது பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
சீனாவின் தியான்ஜினில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க சென்ற, பிரதமர் மோடி ரஷ்ய அதிபர் புடினை நேரடியாக சந்தித்து பேசினார். ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதற்கு, இந்தியா மீது அமெரிக்கா விதித்த 25 சதவீதம் அபராத வரி குறித்து முக்கிய ஆலோசனை நடத்தி உள்ளனர். சீனாவின் தியான்ஜினில் பேச்சுவார்த்தைக்காக மோடியும், புடினும் ஒரே காரில் பயணம் மேற்கொண்டனர்.
சந்திப்பில் நடந்தது என்ன?
ரஷ்ய அதிபர் புடின் உடன் சந்திப்பின் போது, பிரதமர் மோடி கூறியதாவது: மிகவும் சிரமமான காலங்களில் கூட, இந்தியாவும், ரஷ்யாவும் ஒன்றுடன் ஒன்று இணைந்தே பயணிக்கின்றன.
இந்தியா மற்றும் ரஷ்யாவின் நெருங்கிய உறவானது உலக அமைதி, வளம் மற்றும் ஸ்திரத்தன்மைக்கு மிகவும் முக்கியமானது. உக்ரைனில் அமைதி ஏற்படுத்துவதற்காக சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட அனைத்து முயற்சிகளையும் இந்தியா வரவேற்கிறது.
இந்த விவகாரத்தில் அனைத்து தரப்பினரும், ஆக்கப்பூர்வமாக செயல்படுவார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். இது நிரந்தர அமைதி, அமைதியை கண்டறிவதற்கான மனித குலத்தின் வேண்டுகோள். இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.
இந்தியா காத்திருக்கிறது
''நடப்பாண்டு டிசம்பர் மாதம் ரஷ்ய அதிபர் புடின் இந்தியா வருகை தர உள்ளார்.
புடின் வருகைக்காக இந்தியா காத்திருக்கிறது'' என புடின் இடம் பேசுகையில் பிரதமர் மோடி தெரிவித்தார்.