பாக்., தூண்டிவிடும் பயங்கரவாதம்: கிழக்கு ஆசிய மாநாட்டில் இந்தியா கவலை
பாக்., தூண்டிவிடும் பயங்கரவாதம்: கிழக்கு ஆசிய மாநாட்டில் இந்தியா கவலை
பாக்., தூண்டிவிடும் பயங்கரவாதம்: கிழக்கு ஆசிய மாநாட்டில் இந்தியா கவலை

பீனாங் : மலேஷியாவின் பீனாங்கில் நடக்கும் கிழக்கு ஆசியா மற்றும் மற்றும் ஆசியான் அமைப்பு பிராந்திய மூத்த அதிகாரிகள் மாநாட்டில், பாகிஸ்தான் தூண்டிவிடும் பயங்கரவாதம் குறித்து இந்தியா கவலை தெரிவித்து உள்ளது.
கிழக்கு ஆசியா மாநாட்டின் மூத்த அதிகாரிகள் மாநாடு நேற்றும் (ஜூன் 10ம்), ஆசியான் பிராந்திய மூத்த அதிகாரிகள் மாநாடு இன்றும் மலேஷியாவின் பீனாங் மாகாணத்தில் நடந்தது. இதற்கு அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகத்தின் பொதுச்செயலர் தத்தோ ஸ்ரீ அம்ரன் முகமது ஜின் தலைமை வகித்தார்.
இந்த மாநாட்டில் இந்தியா சார்பில் வெளியுறவு அமைச்சகத்தின் கிழக்கு பகுதிகளுக்கான செயலர் குமரன் பங்கேற்றார்.
இந்த கூட்டத்தில், பிராந்திய மற்றும் சர்வதேச வளர்ச்சி திட்டங்கள் குறித்து பேசிய அவர், பயங்கரவாதம், கடலோர பாதுகாப்பு மற்றும் சைபர் பாதுகாப்பு குறித்தும் இந்தியாவின் கருத்தை எடுத்துரைத்தார்.
தொடர்ந்து, காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் குறித்தும், பாகிஸ்தான் தூண்டிவிடும் பயங்கரவாத செயல்கள் குறித்தும் கவலை தெரிவித்தார். இதற்கு பதிலடியாக எடுக்கப்பட்ட ' ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை குறித்து விளக்கியதுடன், இந்த நடவடிக்கை கட்டுப்பாட்டுடன், பொறுப்புடனும் எடுக்கப்பட்ட நடவடிக்கை என விளக்கம் அளித்தார்.