இஸ்ரேலுக்கு உதவிய மூன்று பேர் கொலை
இஸ்ரேலுக்கு உதவிய மூன்று பேர் கொலை
இஸ்ரேலுக்கு உதவிய மூன்று பேர் கொலை
ADDED : செப் 23, 2025 11:05 PM
காசா:இஸ்ரேலுக்கு உளவு வேலை பார்த்ததாகக் கூறி, மூன்று பாலஸ்தீனியர்களை பொதுமக்கள் முன்னிலையில், நடுரோட்டில் வைத்து ஹமாஸ் பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர்.
மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும், ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையே போர் நடந்து வருகிறது. இந்தப் போரை நிறுத்துவதற்கும், பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீ கரிக்கவும் உலக நாடுகள் முயன்று வருகின்றன.
இந்நிலையில், இஸ்ரேல் ராணுவத்துக்கு உதவி செய்ததாக, மூன்று பாலஸ்தீனியர்களை ஹமாஸ் பயங்கரவாதிகள் கொன்றனர். இது தொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது.
அதில், மூன்று பேரை, முகமூடி அணிந்த ஒருவர் மண்டியிட வைக்கிறார். பின்னர், கூடியிருந்த கூட்டத்தின் முன் அவர்களை குனிய வைத்து துப்பாக்கி யால் சுட்டுத் தள்ளும் காட்சி பதிவாகி உள்ளது.