இந்தியா, பாகிஸ்தானுடன் நட்பு: அமெரிக்க ராணுவ உயர் அதிகாரி விருப்பம்
இந்தியா, பாகிஸ்தானுடன் நட்பு: அமெரிக்க ராணுவ உயர் அதிகாரி விருப்பம்
இந்தியா, பாகிஸ்தானுடன் நட்பு: அமெரிக்க ராணுவ உயர் அதிகாரி விருப்பம்

வாஷிங்டன்: இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடன் உறவை பேணுவது முக்கியம் என அமெரிக்க ராணுவத்தின் சென்ட்காம் (CENTCOM) ஜெனரல் மைக்கேல் குரில்லா கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது: இந்தியா மற்றும் பாகிஸ்தானுடன் அமெரிக்கா உறவை பேண வேண்டும். ஒருவருடன் உறவை பேணிவிட்டு மற்றொருவரை கைவிடுவதாக அமையக்கூடாது. இரு நாடுகளுடன் நட்புறவால் கிடைக்கும் பலனை அங்கீகரிக்க வேண்டும்.
ஐஎஸ் - கேபி பயங்கரவாத அமைப்பின் உறுப்பினர்களை பாகிஸ்தான் குறிவைத்து அழித்துள்ளது. நாம் அளித்த உளவுத்தகவல் மூலம் 5 முக்கிய பயங்கரவாதிகளை கைது செய்துள்ளது. 2021 காபூல் விமான நிலையத்தில் 13 அமெரிக்க வீரர்கள் உயிரிழக்க காரணமான ஜாபர் என்ற பயங்கரவாதியை கைது செய்துள்ளதாக பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆசிம் முனீர் என்னிடம் தெரிவித்தார். அவரை நாடு கடத்துவதற்கு விருப்பம் தெரிவித்தார். மத்திய மற்றும் தெற்கு ஆசியாவில் பயங்கரவாதிகளை ஒழிப்பதற்கு பாகிஸ்தானுடனான உறவு முக்கியமானதாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.