Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/உலகம்/ மோடி உள்ளிட்ட உலக தலைவர்களுக்காக வாஷிங்டனை அழகாக்குகிறார் டிரம்ப்

மோடி உள்ளிட்ட உலக தலைவர்களுக்காக வாஷிங்டனை அழகாக்குகிறார் டிரம்ப்

மோடி உள்ளிட்ட உலக தலைவர்களுக்காக வாஷிங்டனை அழகாக்குகிறார் டிரம்ப்

மோடி உள்ளிட்ட உலக தலைவர்களுக்காக வாஷிங்டனை அழகாக்குகிறார் டிரம்ப்

ADDED : மார் 16, 2025 12:33 AM


Google News
Latest Tamil News
வாஷிங்டன்: வாஷிங்டனை குண்டும் குழியுமான சாலைகளுடனும், கூடாரங்களுடனும் பிரதமர் மோடி உள்ளிட்ட உலக தலைவர்கள் பார்ப்பதற்கு தான் விரும்பவில்லை என்றும், அந்த நகரை அழகாக்கப் போவதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார்.

அமெரிக்க அதிபராக கடந்த ஜனவரியில் டொனால்டு டிரம்ப் பதவியேற்ற பின், உலக அளவில் தினந்தோறும் ஏதாவது ஒரு செய்தியில் தவறாமல் இடம் பிடிக்கிறார்.

விரும்பவில்லை


பதவியேற்ற பின், அவரை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா, ஜோர்டான் மன்னர் அப்துல்லா ஆகியோர் சந்தித்தனர்.

நான்காவது உலக தலைவராக நம் பிரதமர் நரேந்திர மோடி, பிப்., 13-ல் சந்தித்தார். இதன்பின், பிரான்ஸ், பிரிட்டன், உக்ரைன் தலைவர்களும் டிரம்பை சந்தித்தனர்.

இந்நிலையில், அமெரிக்காவுக்கு வந்த மோடி உள்ளிட்ட உலகத் தலைவர்கள், தலைநகர் வாஷிங்டன் மோசமான நிலையில் இருப்பதை காண விரும்பவில்லை என, டிரம்ப் தெரிவித்தார்.

வாஷிங்டனை சுத்தமாகவும் குற்றங்கள் இல்லாத நகரமாகவும் வைத்திருக்கும்படி அறிவுறுத்தினார். நீதித்துறை சார்பாக நடந்த கூட்டத்தில் டிரம்ப் கூறியதாவது:

இந்திய பிரதமர் மோடி மற்றும் பிரான்ஸ் அதிபர் உள்ளிட்ட தலைவர்கள், கடந்த ஒன்றரை மாதங்களில் என்னை பார்க்க வந்தனர். அவர்கள் வந்தபோது, உடைந்த சாலைகளையும், சுவரில் கிறுக்கல்களையும், கூடாரங்களையும் பார்ப்பதற்கு நான் விரும்பவில்லை. அதனால், அவற்றை எல்லாம் நாங்கள் அழகாகக் காட்டினோம்.

வெளியுறவு துறை அலுவலகத்துக்கு எதிரே ஏராளமான கூடாரங்கள் இருந்தன. உலக தலைவர்கள் வருகையால் உடனடியாக அவற்றை அகற்றினோம்.

தலைநகர்


தற்போது, உலகின் பெரிய தலைநகரான வாஷிங்டனை சுத்தம் செய்யப் போகிறோம்.

குடிசை, கூடாரங்களை அகற்றுவதோடு, சுவர்களில் தேவையற்ற கிறுக்கல்கள் இல்லாமலும், சாலைகளில் குண்டு குழி இல்லாமலும் பார்த்துக் கொள்வோம்.

இதுபோல, குற்றமே இல்லாத நகரமாகவும் வாஷிங்டனை மாற்ற விரும்புகிறோம். இங்கு வரும் மக்களுக்கு கொலை, கொள்ளை, பாலியல் கொடுமை என எந்தவித குற்றங்களும் இல்லாத பாதுகாப்பான, சுத்தமான நகரம் கிடைக்கும். உலகமே பேசக்கூடிய ஒரு தலைநகரை நாங்கள் உருவாக்குவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us