ஐ.நா.,வில் நாசவேலை விசாரணைக்கு டிரம்ப் உத்தரவு
ஐ.நா.,வில் நாசவேலை விசாரணைக்கு டிரம்ப் உத்தரவு
ஐ.நா.,வில் நாசவேலை விசாரணைக்கு டிரம்ப் உத்தரவு
ADDED : செப் 25, 2025 11:24 PM
நியூயார்க்:அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 80வது ஐ.நா., பொது சபை கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று முன்தினம் அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசினார். அதில் கலந்து கொள்ள வந்த போது, தனக்கு எதிராக மூன்று சதிகள் நடந்ததாக டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.
வலைதளத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது:
முதலாவதாக நான் சென்ற 'எஸ்கலேட்டர்' செயல் இழந்துவிட்டது. நல்வாய்ப்பாக நானும் என் மனைவியும் விழாமல் தப்பித்தோம்.
நா ன் பேச்சை தொடங்கும் போது எனக்கான 'டெலி பிராம்ப்டர்' வேலை செய்யவில்லை.அடுத்ததாக, நான் பேசும்போது அரங்கத்தில் இருந்த யாருக்கும் அந்த ஒலியே சென்று சேரவில்லை. இவை அனைத்துமே எனக்கு எதிரான நாசவேலை. இதுகுறித்து, விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.