ரூ.1.3 லட்சம் கோடி இழப்பீடு பத்திரிகையிடம் கேட்கிறார் டிரம்ப்
ரூ.1.3 லட்சம் கோடி இழப்பீடு பத்திரிகையிடம் கேட்கிறார் டிரம்ப்
ரூ.1.3 லட்சம் கோடி இழப்பீடு பத்திரிகையிடம் கேட்கிறார் டிரம்ப்
ADDED : செப் 17, 2025 02:11 AM
நியூயார்க்:அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், 'தி நியூயார்க் டைம்ஸ்' பத்திரிகை மற்றும் அதன் நான்கு பத்திரிகையாளர்கள் மீது 1.3 லட்சம் கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு அவதுாறு வழக்கைத் தொடர்ந்துள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளாக தன்னை குறித்து பொய் செய்திகள் வெளியிட்டு வந்ததால், இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளதாக டிரம்ப் கூறியுள்ளார்.
தன் நற்பெயரையும், தனது குடும்பத்தையும் சேதப்படுத்தும் தொடர்ச்சியான பிரசாரத்தை தி நியூயார்க் டைம்ஸ் மேற்கொண்டு வருகிறது என்றும் கூறியுள்ளார்.