Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/உலகம்/உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டது: சொல்கிறார் டிரம்ப்!

உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டது: சொல்கிறார் டிரம்ப்!

உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டது: சொல்கிறார் டிரம்ப்!

உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டது: சொல்கிறார் டிரம்ப்!

ADDED : மார் 12, 2025 07:27 AM


Google News
Latest Tamil News
கீவ்: 'உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளது. ரஷ்யா அதற்கு ஒப்புக்கொள்ளும்' என அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

உக்ரைன்- ரஷ்யா இடையே கடந்த 3 ஆண்டுகளை கடந்தும் போர் நீடித்து வருகிறது. போருக்கு முற்றுப்புள்ளி வைக்க அமெரிக்கா தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக சவுதி அரேபியாவில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.



சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, அமெரிக்க வௌியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ, அதிகாரிகள் சந்தித்து உக்ரைன் - ரஷ்யா போர் நிறுத்தம் தொடர்பாக பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டனர்.

இது குறித்து அதிபர் டிரம்ப் கூறியதாவது: சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் நடந்த அமைதிப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டது. இப்போது நாம் ரஷ்யாவுக்குச் செல்ல வேண்டும். ரஷ்யாவும் அதற்கு ஒப்புக்கொள்ளும் என்ற நம்பிக்கை உள்ளது.

இந்த கொடூரமான போரில் ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய இரு நாடுகளின் வீரர்களும் கொல்லப்படுகிறார்கள். 30 நாள் இடைக்கால போர் நிறுத்தத்தை ஏற்க உக்ரைன் தயாராக இருக்கிறது.

போர் நிறுத்தம் கொண்டு வருவது மிகவும் முக்கியம். ரஷ்யாவை இதைச் செய்ய சொன்னால், அது மிகச் சிறப்பாக இருக்கும். எனவே, இது மிகப் பெரியது என்று நான் நினைக்கிறேன்.இவ்வாறு டிரம்ப் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us