/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/காற்றழுத்த தாழ்வு மண்டலம் : பாம்பனில் புயல் எச்சரிக்கைகாற்றழுத்த தாழ்வு மண்டலம் : பாம்பனில் புயல் எச்சரிக்கை
காற்றழுத்த தாழ்வு மண்டலம் : பாம்பனில் புயல் எச்சரிக்கை
காற்றழுத்த தாழ்வு மண்டலம் : பாம்பனில் புயல் எச்சரிக்கை
காற்றழுத்த தாழ்வு மண்டலம் : பாம்பனில் புயல் எச்சரிக்கை
ADDED : மே 18, 2010 02:45 AM
ராமேஸ்வரம் : வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதை தொடர்ந்து பாம்பன் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
சென்னைக்கு தென்கிழக்கே வங்க கடலில் 930 கி.மீ., தூரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. ஆழ் கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை வடமேற்கில் மெல்ல நகர்ந்து செல்வதால் ஆழ்கடல் செல்லும் மீனவர்களுக்கு புயல் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பாம்பன் துறைமுக அலுவலகத்தில் நேற்று இரவு ஒன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டு, மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் ஆழ்கடலுக்கு செல்வதை தவிர்க்கும்படி எச்சரிக்கை செய்யப்பட்டது. இரவிலும் தெரியும் வகையில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை விளக்குகளும் எரியவிட்டு கரையோர மீனவர்களுக்கும் எச்சரிக்கை செய்யப்பட்டது.