தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ17-Aug-2026

1/

ஜார்க்கண்டில் அரசு பணி தேர்வுகளில் நடந்த முறைகேடு புகார்களின் மீது விசாரணை நடத்தக்கோரி ராஞ்சியில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் அமைப்பினர்.
17-Aug-2026

ShareTweetShareShare

2/

புலம் அமைப்பு மற்றும் தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டு வசதி மேம்பாட்டு கழகம் இணைந்து நடத்திய ஆதி இசை மற்றும் மரபு போர்க்கலை கருவிகளின் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த பழங்கால பொருட்களை பார்வையிட்ட மாணவ-மாணவியர். இடம்: விக்டோரியா அரங்கம், சென்னை.
17-Aug-2026

3/

சகோதரத்துவத்தை போற்றும் வகையில் நாடு முழுவதும் ரக்ஷா பந்தன் வரும் 28ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி குஜராத் மாநிலம் சூரத்தில் தன்னார்வ அமைப்பு சார்பில் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு தங்களின் சகோதரராக கருதி ராக்கி கயிறு கட்டிய பெண்கள்.
17-Aug-2026

4/

தென்மேற்கு பருவமழை காரணமாக உத்தர பிரதேசத்தில் கனமழை பெய்து வருகிறது; கங்கை நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. உன்னாவ் பகுதியில் கரையோரங்களில் உள்ள குடியிருப்புகளை வெள்ளநீர் சூழ்ந்தது. இதனால் அங்குள்ள பொதுமக்கள் தங்கள் அன்றாட பணிகளை மேற்கொள்ள படகுகளை பயன்படுத்தி வருகின்றனர்.
17-Aug-2026

5/

கேரளாவில் 10 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறும் ஓணம் பண்டிகை துவங்கியது; இதையொட்டி கேரளாவின் கொச்சியில் நடந்த ஓணம் பண்டிகையின் துவக்க விழாவில் பாரம்பரிய உடை அலங்காரங்களுடன் பங்கேற்ற கலைஞர்கள்.
17-Aug-2026

இன்றைய போட்டோ16-Aug-2026

6/

சென்னை புதுவண்ணார்பேட்டை பேருந்து நிலையம் கட்டும் பணிகள் முடிந்து திறப்பு விழாவிற்கு தயாராக உள்ளது.இடம்: சுங்கச்சாவடி.
16-Aug-2026

7/

சென்னை ராயபுரம் மேம்பாலத்தில் தடுப்பு சுவர் உடைந்து ஆபத்தான நிலையில் காணப்படுகின்றன.
16-Aug-2026

8/

சென்னை பாடிகார்ட் முனீஸ்வரர் கோவிலில் ஆடி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை முன்னிட்டு சிறப்பு பூஜை மற்றும் கூழ் வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய குவிந்தனர்.
16-Aug-2026

9/

புதுச்சேரி அரிக்கன் மேடு பகுதியில் தொடர் விடுமுறை காரணமாக ஏராளமான சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்தனர்.
16-Aug-2026

10/

விழுப்புரம் புதிய பஸ் நிலையம் பஸ் வெளியே வரும் முன்பு மெகா பள்ளம் இருப்பதால் வாகனங்களுக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது
16-Aug-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us