சென்னையில் காலை முதல் மதியம் வரை வெயில் வாட்டி வதைத்தது மதிய வேளையில் சிறிது நேரம் மழை பொழிந்து குளிர்ச்சியை ஏற்படுத்தியது அண்ணாசாலையில் குடை பிடித்தபடி செல்லும் கல்லூரி மாணவிகள்.
வட மாநிலங்களில் ஆனி மாத திங்கள் கிழமை ஜேஷ்ட சோமவாரம் என கொண்டாடப்படுகிறது. இந்நாளில் பக்தர்கள் கங்கையில் இருந்து புனித நீரை சுமந்து சென்று சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்வர். உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் திரளான பக்தர்கள் கங்கை நீரை சுமந்து சென்றனர்.