Dinamalar-Logo
Dinamalar Logo


/ஸ்பெஷல்/அறுசுவை/ வடமாநிலத்தின் மால்புவா ஸ்வீட் செய்யலாமா?

வடமாநிலத்தின் மால்புவா ஸ்வீட் செய்யலாமா?

வடமாநிலத்தின் மால்புவா ஸ்வீட் செய்யலாமா?

வடமாநிலத்தின் மால்புவா ஸ்வீட் செய்யலாமா?

ADDED : மார் 15, 2025 08:06 AM


Google News
Latest Tamil News
தென் மாநிலங்களில் எந்த மொழி புத்தாண்டாக இருந்தாலும், வழக்கமான இனிப்பு வகைகளையே செய்து வருகிறோம். இம்முறை வட மாவட்டங்களில் தீபாவளி, ஹோலி, நவராத்திரி பண்டிகைகளில் தயாரிக்கப்படும் 'மால்புவா' இனிப்பு எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

செய்முறை


 ஒரு பாத்திரத்தில் அரை லிட்டர் காய்ச்சிய பால், 250 கிராம் மைதா மாவு எடுத்து கொள்ளவும். ஒரு சிட்டிகை சோம்பு பொடி, அரை டீஸ்பூன் ஏலக்காய் துாள், ஒரு கிராம் குங்குமப் பூ சேர்க்கவும்.

 அடுத்ததாக, 75 கிராம் ஸ்வீட் கோவா போட்டு குறைந்தது 10 நிமிடம் கலக்கவும். மாவில் கட்டி இருக்கக் கூடாது. இறுதியாக ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து, 15 நிமிடங்களுக்கு தனியாக வைக்கவும்.

 இதற்கிடையில், குலாப் ஜாமூனுக்கு தயாரிப்பது போல, சர்க்கரை பாகு தயார் செய்து கொள்ளுங்கள்.

 கடாயில் கால் லிட்டர் கடலை எண்ணெய் ஊற்றி சூடுபடுத்தவும். எண்ணெய் சூடானவுடன், மிதமாக மாற்றவும்.

 கடாயில் மாவு ஊற்றும் முன், இரண்டு ஸ்பூன் தண்ணீர் ஊற்றுங்கள். மால்புவா பஞ்சு போல வரும்.

 அதிரசம் சுடுவது போன்று மாவு எடுத்து, முக்கால் கரண்டி ஊற்றி, பொன்னிறத்துக்கு மாறும் வரை வறுக்கவும். குறைந்தது, 6 - 8 நிமிடங்களுக்கு வறுத்த பின், சர்க்கரை பாகில், 30 நிமிடங்கள் ஊறவைக்கவும்

 பரிமாறும் முன், மால்புவா மீது ஒரு ஸ்பூன் வெண்ணிலா ஐஸ் கிரீம் வைத்துக் கொடுங்கள். சாப்பிட்டுக் கொண்டே இருப்பர்.

- நமது நிருபர் -





      Our Apps Available On




      Dinamalar

      Follow us