sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/ஸ்பெஷல்/அறுசுவை/ மாலை டிபனுக்கு சிக்கன் சமோசா

 மாலை டிபனுக்கு சிக்கன் சமோசா

 மாலை டிபனுக்கு சிக்கன் சமோசா


ADDED : மே 09, 2026 02:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 09, 2026 02:12 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- நமது நிருபர் -

சிக்கன் சமோசா எப்படி செய்வது என பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

மைதா மாவு: 1 கப்

உப்பு: சுவைக்கு தேவையான அளவு

சோம்பு: 1 ஸ்பூன்

நெய் அல்லது எண்ணெய்: 3 ஸ்பூன்

சிக்கன்: 250 கிராம்

வெங்காயம்: 1 பெரியது

இஞ்சி, பூண்டு பேஸ்ட்: 1 ஸ்பூன்

பச்சை மிளகாய்: 2 - 3

மஞ்சள் துாள்: அரை ஸ்பூன்

மிளகாய் துாள்: 1 ஸ்பூன்

கரம் மசாலா: 1 ஸ்பூன்

கொத்துமல்லி: ஒரு கைப்பிடி

எண்ணெய்: பொறிக்க தேவையான அளவு

ஓமம்: 1 ஸ்பூன்

செய்முறை

ஒரு பாத்திரத்தில், மைதா மாவு, ஓமம், உப்பு சேர்க்கவும். இதில் சிறிது, சிறிதாக தண்ணீர் சேர்த்து, கெட்டியாக பிசைந்து கொள்ளவும். இதை அரை மணி நேரம் ஊற விடுங்கள்.

அடுப்பில் வாணலியை வைத்து, 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றவும். காய்ந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், போட்டு வதக்கவும். பின் இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்த்து, பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.

இதில், சிறிதாக வெட்டிய சிக்கன் துண்டுகளை போட்டு, மஞ்சள் துாள், கரம் மசாலா, மிளகாய் துாள், உப்பு சேர்த்து நன்றாக வேக வைக்கவும். சிக்கன் முழுமையாக வெந்த பின், பொடியாக நறுக்கிய கொத்துமல்லியை போட்டு கிளறவும். இதை ஆற விடவும்.

அதன் பின், ஏற்கனவே தயார் செய்து வைத்த மாவை, சிறு, சிறு உருண்டைகளாக்கி, சிறிய பூரிகளை போல தட்டி கொள்ளவும்.

இதை பாதியாக வெட்டி, கோன் வடிவத்தில் மடிக்கவும். இதற்குள் சிக்கன் மசாலாவை நிரப்பி, மாவின் ஓரத்தின் நீர் தடவி ஒட்டவும். அனைத்து உருண்டைகளையும், இது போன்று தயார் செய்து கொள்ளவும்.

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றவும். காய்ந்ததும் மிதமான தீயில் வைத்து, சமோசாக்களை போட்டு இரண்டு பக்கமும், பொன்னிறமாக வறுக்கவும்.

இது, கடைகளில் விற்கப்படும் சிக்கன் சமோசா போல அதிக சுவையாக இருக்கும். புதினா சட்னி அல்லது தக்காளி சாஸ் தொட்டு சாப்பிட்டால், அதிக சுவையாக இருக்கும்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us