sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/ஸ்பெஷல்/அறுசுவை/ மொறுமொறுப்பான வெண்டைக்காய் குர்குரே

 மொறுமொறுப்பான வெண்டைக்காய் குர்குரே

 மொறுமொறுப்பான வெண்டைக்காய் குர்குரே


ADDED : மே 02, 2026 03:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 02, 2026 03:39 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- நமது நிருபர் -: உடலுக்கு பல நன்மைகள் அளிக்கக்கூடிய வெண்டைக்காய் தவிர்க்கப் படுகிறது. வெண்டைக்காய் பொரியல், வெண்டைக்காய் குழம்புகளை குழந்தைகள் விரும்புவதில்லை. அவர்களுக்கு பிடித்த வகையில் வெண்டைக்காய் குர்குரே செய்து கொடுத்தால், மொறுமொறுப்பாகவும், ருசியாகவும் உள்ளதென விரும்பிச் சாப்பிடுவர்.

தேவையான பொருட்கள்

l வெண்டைக்காய் - அரை கிலோ

l கடலை மாவு - ஒரு கப்

l அரிசி மாவு - ஒரு கப்

l உலர் மாங்காய் பொடி - ஒரு ஸ்பூன்

l உப்பு - தேவையான அளவு

l கடலை எண்ணெய் - ஒரு ஸ்பூன்

l மஞ்சள் துாள் - கால் ஸ்பூன்

l சீரகத் துாள் - அரை ஸ்பூன்

l மல்லித் துாள் - ஒரு டீஸ்பூன்

l சாட் மசாலா அல்லது கரம் மசாலா - ஒரு ஸ்பூன்

செய்முறை

l அரை கிலோ வெண்டைக்காயை தண்ணீரில் நன்றாக கழுவி, அரை மணி நேரம் வெயிலில் காய விடவும்.

l தண்ணீர் நன்கு உறிஞ்சிய பின் வெண்டைக்காயில் உள்ள விதைகளை நீக்கிவிட்டு, நீட்டமாக வெட்டவும். ஒரு சொட்டு தண்ணீர் அல்லது ஈரத்தன்மை இருந்தாலும் கூட மொறுமொறுப்பு கிடைக்காது; ரோஸ்ட் போலவும் இருக்காது.

l இதனுடன் தலா ஒரு கப் கடலை மாவு, அரிசி மாவு சேர்த்து கலக்கவும். அடுத்ததாக உலர் மாங்காய் பொடி ஒரு ஸ்பூன், சாட் மசாலா ஒரு ஸ்பூன் சேருங்கள். சாட் மசாலா இல்லையென்றால், கரம் மசாலா பயன்படுத்தலாம்.

l இப்போது கால் டீஸ்பூன் மஞ்சள் துாள், அரை டீஸ்பூன் சீரகத்துாள், ஒரு டீஸ்பூன் மல்லித்துாள் சேருங்கள்.

l இறுதியாக தேவையான அளவு உப்பு போட்டு அனைத்தையும் நன்றாக கலந்து, 10 நிமிடம் அப்படியே விட்டு விடுங்கள். மசாலா பொருட்கள் வெண்டைக்காயில் ஊறட்டும்.

l இதற்கிடையில், வாணலியில் கடலெண்ணெய் ஊற்றி சூடுபடுத்தவும். எண்ணெய் சூடாகி விட்டதா என ஒரு வெண்டைக்காய் போட்டு பார்க்கவும்.

l அடுப்பை மிதமான தீயில் வைத்து வெண்டைக்காயை உதிரி உதிரியாக எண்ணெயி-ல் போடுங்கள்.

l மிதமான சூட்டில், 3-4 நிமிடங்களில் வெண்டைக்காய் குர்குரே தயாராகி விடும். ஆரம்பத்தில் நீக்கிய விதைகளை எண்ணெயில் பொரித்து சாப்பிடலாம்.

l இதை மாலை நேரத்து ஸ்நாக் அல்லது மதிய வேளையில் குச்சி சிப்ஸ் போல கலவை சாதங்களுடன் குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us