ADDED : ஆக 15, 2026 12:59 AM

- நமது நிருபர் -
தமிழர்களின் பாரம்பரிய சமையல் கலையில் அசைவ உணவுகளுக்கு எப்போதும் தனி இடம் உண்டு. அதிலும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், மருத்துவ குணம் கொண்ட ஈரல் மிளகு வறுவல், பலரது விருப்பமான உணவாக உள்ளது.
நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், கர்ப்பிணி பெண்களுக்கு அதிக நோய் எதிர்ப்பு சக்தி தேவைப்படுகிறது. ஆட்டு ஈரல் மிளகு வறுவல் ரொம்ப சிம்பிளாக செய்யும் ரெசிபி தான். சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம்.
ரசம் சாதத்திற்கு சைடு டிஷ் ஆக வைத்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும். குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடுவர். இதை சாப்பிடும் போது குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
தேவையான பொருட்கள்: ஈரல் - கால் கிலோ
தேங்காய் துருவல் - இரண்டு டீஸ்பூன்
சீரகம் - ஒரு டீஸ்பூன்
சோம்பு - ஒரு டீஸ்பூன்
மிளகு - ஒரு டீஸ்பூன்
கடுகு, உளுத்தம் பருப்பு - அரை டீஸ்பூன்
கருவேப்பிலை - ஒரு கொத்து
கரம் மசாலா பொடி - கால் டீஸ்பூன்
மஞ்சள் பொடி - கால் டீஸ்பூன்
மிளகாய் பொடி -- அரை டீஸ்பூன்
ஒரு பெரிய வெங்காயம்
உப்பு, எண்ணெய் தேவையான அளவு.
செய்முறை: ஈரலை நன்கு கழுவி அதனுடன் மஞ்சள் துாள், மிளகாய் துாள், உப்பு, கரம் மசாலா சேர்த்து குக்கரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, நான்கு விசில் விட்டு எடுக்கவும்.
கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு, உளுத்தம் பருப்பு, சோம்பு, கருவேப்பிலை போட்டு நன்கு தாளித்துக் கொள்ளவும். பெரிய வெங்காயத்தை பொடி பொடியாக நறுக்கி, நன்றாக வதக்கவும்.
பின், ஈரலை சேர்த்து நன்றாக கிளறிய பின், சீரகம், மிளகு அரைத்து சேர்த்து, தேங்காய் துருவலையும் சேர்க்க வேண்டும்.
நன்கு கெட்டியான பின், இறக்கினால் சுவையான ஈரல் மிளகு வறுவல் தயார்!
