Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/ஸ்பெஷல்/அறுசுவை/ ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பாசிப்பயறு சப்பாத்தி

 ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பாசிப்பயறு சப்பாத்தி

 ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பாசிப்பயறு சப்பாத்தி


ADDED : பிப் 21, 2026 04:20 AM

Follow on Google

ADDED : பிப் 21, 2026 04:20 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- நமது நிருபர் -: தினமும் ஆரோக்கியமான சிற்றுண்டி சமைக்க பலருக்கும் நேரம் இருப்பது இல்லை. பணிக்கு செல்லும் அவசரத்தில் ஏதோ ஒன்றை சாப்பிடுகின்றனர். குறைந்த நேரத்தில் ஊட்டச்சத்தான உணவு சமைக்கலாம். முளை கட்டிய பாசிப்பயறு சப்பாத்தி சுவைத்துள்ளீர்களா. இதை எப்படி செய்வது என, தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்

முளை கட்டிய பாசிப்பயறு - 2 கப்

இஞ்சி - 1 சிறிய துண்டு

உருளைக்கிழங்கு - 1

வெங்காயம் - 1

பச்சை மிளகாய் - நான்கைந்து

கொத்துமல்லி - ஒரு கைப்பிடி

உப்பு - தேவையன அளவு

சீரகம் - 1 ஸ்பூன்

செய்முறை

முதலில் முளைக்கட்டிய பாசிப் பயறை மிக்சியில் போடவும். அதில், இஞ்சி, சிறிதளவு நீர் சேர்த்து, கெட்டியாக அரைத்து கொள்ளவும்.

அத்துடன், வேகவைத்து உறித்த உருளைக்கிழங்கு, சீரகம், பொடியாக நறுக்கிய கொத்துமல்லி, உப்பு சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் நன்றாக பிசைந்து கொள்ளவும்.

அடுப்பில் தோசைக்கல் வைத்து நெய் ஊற்றி சூடானதும், ஏற்கனவே பிசைந்து வைத்துள்ள மாவை சப்பாத்தி தட்டி, தோசைக்கல்லில் போட்டு சுற்றிலும் நெய் ஊற்றவும். வெந்தபின் திருப்பி போடவும்.

இரண்டு பக்கமும் பொன்னிறமாக வேக வைத்தால், சுவையான பாசிப்பயறு சப்பாத்தி தயார். தொட்டுக்கொள்ள தக்காளி சட்னி, தேங்காய் சட்னி பொருத்தமாக இருக்கும். முளை கட்டிய பாசிப்பயறு உடலுக்கு குளுமையானது. ஆரோக்கியத்துக்கு நல்லது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap