Dinamalar-Logo
Dinamalar Logo


/ஸ்பெஷல்/அறுசுவை/ ஆரோக்கியத்தை அள்ளி தரும் 'ட்ரை ப்ரூட்ஸ் பர்பி'

ஆரோக்கியத்தை அள்ளி தரும் 'ட்ரை ப்ரூட்ஸ் பர்பி'

ஆரோக்கியத்தை அள்ளி தரும் 'ட்ரை ப்ரூட்ஸ் பர்பி'

ஆரோக்கியத்தை அள்ளி தரும் 'ட்ரை ப்ரூட்ஸ் பர்பி'

ADDED : செப் 27, 2025 04:49 AM


Google News
Latest Tamil News
பொதுவாக உலர்ந்த பழங்கள், உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது. இவற்றை இனிப்பு பண்டங்களில் சேர்க்கின்றனர். உலர்ந்த பழங்களை பயன் படுத்தி, சுவையான பர்பி தயாரிக்கலாம். இது தேங்காய் பர்பியை விட, அதிக சுவையாக இருக்கும். உலர்ந்த பழங்கள் பர்பியை எப்படி செய்வது என பார்க்கலாமா?

செய்முறை முதலில் அடுப்பில் வாணலி வைத்து, மக்கானாவை போட்டு மொறுமொறுப்பாக வறுக்கவும். பின் இறக்கிய பின் அது ஆறியதும், மிக்சியில் போட்டு பொடியாக அரைக்கவும். இதை ஒரு கிண்ணத்தில் எடுத்து வைக்கவும். அதன்பின் பாதாம், முந்திரிப்பருப்பு, பிஸ்தாவை மிக்சியில் போட்டு பொடியாக்கி, மக்கானா கலவையுடன் சேர்க்கவும். இதில் ஏலக்காய் துாள், ஜாதிக்காய் துாள், குங்குமப்பூ சேர்த்து கலக்கவும்.

ஒரு அகலமான பாத்திரத்தை, அடுப்பில் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி, சிறிதளவு நெய், பொடித்த வெல்லம் சேர்த்து கொதிக்க வைத்து, பாகு தயாரிக்கவும். அதை இறக்கி வைத்துவிட்டு, வேறு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் ஒரு ஸ்பூன் நெய் ஊற்றவும். வேர்க்கடலை, மக்கானா, பாதாம் கலவையை போட்டு மிதமான தீயில் வறுக்கவும்.

நறுமணம் வரும்போது, வெல்ல பாகுவை சேர்த்து நன்றாக கிளறவும். இது அல்வா போன்று கெட்டியான பின், ஒரு அகலமான தட்டில் நெய் தடவி, இந்த கலவையை கொட்டி சமமாக பரப்பவும். அதன் மீது சிறிதளவு உலர்ந்த பழங்களை பொடியாக்கி துாவி, விருப்பமான வடிவில் சிறு, சிறு துண்டுகளாக வெட்டவும், ஆறிய பின் காற்றுப்புகாத டப்பாவில் வைத்துக் கொள்ளலாம். பர்ப்பியில் இனிப்பு அதிகம் இருக்க வேண்டுமானால், கூடுதல் வெல்லம் சேர்க்கலாம்.

வெல்லம், உலர்ந்த பழங்கள் சேர்ப்பதால், சிறார்கள், வயதானவர்களின் உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது. உலர்ந்த பழங்களை சாப்பிடாத சிறார்களுக்கு, உலர்ந்த பழங்கள் பர்பி செய்து கொடுத்தால், விரும்பி சாப்பிடுவர்.

- நமது நிருபர் -





      Our Apps Available On




      Dinamalar

      Follow us