/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/தொடர் மறியல் போராட்டம் நேற்றும் 450 ஆசிரியர்கள் கைதுதொடர் மறியல் போராட்டம் நேற்றும் 450 ஆசிரியர்கள் கைது
தொடர் மறியல் போராட்டம் நேற்றும் 450 ஆசிரியர்கள் கைது
தொடர் மறியல் போராட்டம் நேற்றும் 450 ஆசிரியர்கள் கைது
தொடர் மறியல் போராட்டம் நேற்றும் 450 ஆசிரியர்கள் கைது
ADDED : டிச 28, 2010 09:17 PM
விழுப்புரம் : சம்பள உயர்வு கோரி இரண்டாவது நாளாக மறியல் செய்த தொடக்க கல்வி ஆசிரியர்கள் 450 பேர் விழுப்புரத்தில் கைது செய்யப்பட்டனர்.
விழுப்புரத்தில் தொடக்க கல்வி ஆசிரியர் கூட்டணியினர் (டிட்டோஜேக்) மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதிய உயர்வு உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டாம் நாளாக நேற்றும் மறியல் செய்தனர். மாவட்ட பொருளாளர் குமார் தலைமையில் கோரிக்கை வலியுறுத்தி பேரணியாக வந்த ஆசிரியர்கள் முற்பகல் 11 மணிக்கு கோர்ட் வளாகம் எதிரே நெடுஞ்சாலையில் மறியல் செய்தனர். டவுன் டி.எஸ்.பி., மாதவன் தலைமையிலான போலீசார் மறியல் செய்த 450 ஆசிரியர்களை கைது செய்து ஏ.எஸ்.ஜி., திருமண மண்டபத்தில் காவலில் வைத்தனர்.