/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/பொள்ளாச்சி தாலுகா ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை கூட்டம்பொள்ளாச்சி தாலுகா ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை கூட்டம்
பொள்ளாச்சி தாலுகா ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை கூட்டம்
பொள்ளாச்சி தாலுகா ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை கூட்டம்
பொள்ளாச்சி தாலுகா ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை கூட்டம்
ADDED : டிச 28, 2010 10:40 PM
பொள்ளாச்சி: பொள்ளாச்சி தாலுகாவிலுள்ள ஊராட்சிகளில் இன்று சிறப்பு கிராம சபை நடக்கிறது.
ஊராட்சிகளில், இதுவரை ஒரு வார்டு இரண்டு முதல் மூன்று உறுப்பினர்கள் வரை உள்ளனர். இதை மாற்றி ஒரு வார்டுக்கு ஒரு உறுப்பினர் என்ற அடிப்படையில் கணக்கெடுக்கப்பட்டு வார்டுகள் சீரமைக்கப்படவுள்ளன. கடந்த 2006ம் ஆண்டு முதல் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் செயல்படுத்த கிராமங்கள் அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் ஊராட்சிகளிலுள்ள வார்டுகள் சீரமைக்கப்பட்டன. இம்மாதத்துடன் அனைத்து ஊராட்சிகளிலும் வார்டுகள் சீரமைக்கப்பட்டு மக்கள் தொகை அடிப்படையில் வார்டுகள் பிரிக்கப்பட்டுள்ளன. இது குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஊராட்சிகளில் இன்று சிறப்பு கிராமசபை நடக்கிறது. பொள்ளாச்சி தாலுகாவுக்குட்பட்ட வடக்கிலுள்ள 39 ஊராட்சிகளிலும், தெற்கில் 26 ஊராட்சிகளிலும், ஆனைமலையில் 19 ஊராட்சிகளிலும், கிணத்துக்கடவு ஒன்றியத்தில் 34 ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபை கூட்டம் நடக்கிறது.