புத்தாண்டை முன்னிட்டு பொட்டுக்கடலையில் ஓவியம்
புத்தாண்டை முன்னிட்டு பொட்டுக்கடலையில் ஓவியம்
புத்தாண்டை முன்னிட்டு பொட்டுக்கடலையில் ஓவியம்
ADDED : டிச 31, 2010 11:27 PM

புதுச்சேரி : புத்தாண்டை முன்னிட்டு தனியார் கல்லூரி ஓவியர் பொட்டுக் கடலையின் நடுவில் 'ஹாப்பி நியூ இயர் 2011' ஓவியமாக செதுக்கி அசத்தியுள்ளார்.
மதகடிப்பட்டு அடுத்த கலிதீர்த்தாள்குப்பத்தைச் சேர்ந்தவர் கண்ணன் (33).
பாரதியார் பல்கலைக் கூடத்தில் ஓவியம் பயின்ற இவர், தற்போது மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் கல்லூரியில் சமுதாய மருத்துவ பிரிவில் ஓவியராக பணியாற்றுகிறார். அரிசி, வெற்றிலை, சோப்பு போன்றவற்றில் பல்வேறு ஓவியங்களை வரைந்துள்ள இவர், தற்போது 2011ம் புத்தாண்டை முன்னிட்டு, பொட்டுக் கடலையில் ஓவியம் வரைந்துள்ளார். 'ஹாப்பி நியூ இயர் 2011' என்ற வார்த்தையை ஆங்கில மொழியில் பொட்டுக் கடலையில் ஓவியமாக செதுக்கியுள்ளார். கண்ணன் கூறுகையில், நான் சிறு வயதில் இருந்தே ஓவியம் வரைவதில் ஆர்வம் காட்டி வருகிறேன். முக்கிய விழா வரும் நாட்களை முன் வைத்து பல்வேறு ஓவியங்களை வரைந்துள்ளேன். தீபாவளியின் போது, சோப்பில் ஹாப்பி தீபாவளி என்பதை சிற்பமாக செதுக்கினேன். தற்போது, புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து பொட்டுக்கடலையில் ஓவியம் வரைந்துள்ளேன். இதற்காக நான் நான்கு மணி நேரம் எடுத்துக் கொண்டேன். கின்னஸ் சாதனை செய்வதே என்னுடைய லட்சியம்' என்றார்.


