/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/பா.ம.க., நிர்வாகி கொலை : ஸ்ரீவி.,யில் போலீசார் முகாம்பா.ம.க., நிர்வாகி கொலை : ஸ்ரீவி.,யில் போலீசார் முகாம்
பா.ம.க., நிர்வாகி கொலை : ஸ்ரீவி.,யில் போலீசார் முகாம்
பா.ம.க., நிர்வாகி கொலை : ஸ்ரீவி.,யில் போலீசார் முகாம்
பா.ம.க., நிர்வாகி கொலை : ஸ்ரீவி.,யில் போலீசார் முகாம்
ADDED : ஜூலை 27, 2011 10:28 PM
ஸ்ரீவில்லிபுத்தூர் : மதுரையில் பா.ம.க., மாநில துணை பொது செயலாளர் இளஞ்செழியன் கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் ஸ்ரீவில்லிபுத்தூரில் தஞ்சம் புகுந்துள்ளதாக கிடைத்த தகவல் பேரில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
மதுரையில் நேற்று முன் தினம் இளஞ்செழியன் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக காசி விஸ்நாதன் போலீசில் சரணடைந்தார். கொலையில் தொடர்புடைய சிலர், ஸ்ரீவில்லிபுத்தூர் கோட்டைப்பட்டியில் தலைமறைவாக இருப்பதாகவும், வக்கீல் துணையுடன் ஸ்ரீவி.,கோர்ட்டில் சரணடைய உள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதி போலீசார் கோட்டைப்பட்டி உட்பட சுற்று பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். மேலும், ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட் வளாகத்தில் மதுரை, ஸ்ரீவி., போலீசார் 'மப்டி' யில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். ஆனால் நேற்று மாலை வரை யாரும் சரணடையதாதால் ஏமாற்றத்துடன் திரும்பினர்.