/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு தேசிய மாதர் சம்மேளனம் தீர்மானம்பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு தேசிய மாதர் சம்மேளனம் தீர்மானம்
பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு தேசிய மாதர் சம்மேளனம் தீர்மானம்
பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு தேசிய மாதர் சம்மேளனம் தீர்மானம்
பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு தேசிய மாதர் சம்மேளனம் தீர்மானம்
ADDED : ஆக 03, 2011 10:36 PM
திருப்பூர் : 'உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்,' என, இந்திய தேசிய மாதர் சம்மேளன மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்திய தேசிய மாதர் சம்மேளனம் திருப்பூர் தெற்கு வட்டார மாநாடு, இ.கம்யூ., மாவட்ட அலுவலகத்தில் நடந்தது. தெய்வாத்தாள், மல்லிகா, ஈஸ்வரி ஆகியோர் தலைமை வகித்தனர். மாநாட்டு கொடியை மாவட்ட தலைவர் ஜெயலட்சுமி ஏற்றினார். இ.கம்யூ., மாவட்ட தலைவர் ரவி துவக்கி வைத்தார். வடக்கு வட்டார செயலாளர் தமிழ்செல்வி, மாவட்ட செயலாளர் நதியா உள்ளிட்ட 200 பேர் பங்கேற்றனர்.புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது. தலைவராக தெய்வாத்தாள், துணை தலைவராக மல்லிகாபேகம், செயலாளராக சரஸ்வதி, துணை செயலாளராக விஜயலட்சுமி, பொருளாளராக மாலதி தேர்வு செய்யப்பட்டனர். இதில், 'உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்; சமச்சீர் கல்வியை இந்தாண்டு அமல்படுத்த வேண்டும். மாவட்டத்தில் மக்கள் தொகை அதிகரித்து, பள்ளி இறுதி வகுப்பில் தேர்ச்சி பெறும் மாணவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. மாணவர்கள் உயர் கல்வி பெறும் வகையில் போதிய அளவு அரசு கல்லூரிகள் துவக்கவும், வடக்கு பகுதியில் மகளிர் கல்லூரி துவங்க வேண்டும்.'தென்னம்பாளையம் முதல் குமரன் சிலை வரை பறக்கும் பாலம் அமைக்க வேண்டும்; விண்ணப்பித்த 60 நாட்களுக்குள் புதிய ரேஷன் கார்டு வழங்க வேண்டும்,' என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


