சுற்றுலா, விருந்தோம்பல் சான்றிதழ் பட்டய படிப்பு: துணைவேந்தர் பேச்சு
சுற்றுலா, விருந்தோம்பல் சான்றிதழ் பட்டய படிப்பு: துணைவேந்தர் பேச்சு
சுற்றுலா, விருந்தோம்பல் சான்றிதழ் பட்டய படிப்பு: துணைவேந்தர் பேச்சு
ADDED : செப் 29, 2011 12:53 AM
காரைக்குடி: வரும் கல்வியாண்டில், அழகப்பா பல்கலையில் 'சுற்றுலா மற்றும் விருந்தோம்பல்' மேலாண்மை பாட பிரிவுகளில் சான்றிதழ் மற்றும் பட்டய வகுப்பு துவக்கப்படவுள்ளதாக, துணை வேந்தர் சுடலைமுத்து பேசினார்.
பன்னாட்டு வர்த்தகம், வணிகவியல் துறையின் சார்பில் பல்கலையில் உலக சுற்றுலா நாள் கொண்டாடப்பட்டது. மேலாண்மை துறை முதன்மை பேராசிரியர் செல்வம் வரவேற்றார்.துணை வேந்தர், பேசுகையில், '' உலக அளவில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார துறைகளில் சுற்றுலா துறையும் ஒன்று. 2010ல் இந்தியாவிற்கு 17.9 மில்லியன் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். இவர்களில் அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் இருந்து பெரும்பாலானோர் வந்து சென்றுள்ளனர். ஆந்திரா, உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா, தமிழகத்திற்கு சுற்றுலா பயணிகள் வருகின்றனர். 43,000 கோவில்கள் மற்றும் யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட சுற்றுலா மையங்கள் தமிழகத்தில் அதிகமாக உள்ளன. வரும் கல்வியாண்டில் அழகப்பா பல்கலையில் சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் மேலாண்மை பாடப்பிரிவுகளில் சான்றிதழ் மற்றும் பட்டய வகுப்புகள் துவங்கப்படும். இந்த பாடத்திட்டத்தில் சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள பாரம்பரிய சுற்றுலா மையங்களை உள்ளடக்கியிருக்கும்,'' என்றார்.


