ADDED : செப் 30, 2011 01:56 AM
காரைக்கால் : காரைக்கால் நேரு வீதியைச் சேர்ந்தவர் குழந்தைசாமி பிலோமீனா.
கடந்த சில மாதங்களுக்கு முன் பிரான்ஸ் நாட்டுக்குச் சென்றுள் ளார். கடந்த 22ம் தேதி இரவு பூட்டி கிடந்த இவரது வீட்டின் கதவை உடைத்து மர்ம நபர்கள் பணம், நகைகளை கொள்ளை அடித்து சென்றுள்ளனர். வீட்டின் உரிமையாளர் வெளிநாடு சென்றுள்ளதால் கொள்ளை போன பொருட்கள் மதிப்பு தெரியவில்லை. வீடு திறந்து கிடப்பது குறித்து திருநள்ளார் ரோட்டில் வசிக்கும் குழந்தைசாமியின் சகோதரி மேரி அல்போன்சாவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேரி அல்போன்சா கொடுத்த புகாரின் பேரில் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து வீட்டை உடைத்து திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.