/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/அண்ணமங்கலம் கிராமத்திற்கு போலீஸ் பாதுகாப்பு அவசியம் :மாஜி எம்.எல்.ஏ., கோரிக்கைஅண்ணமங்கலம் கிராமத்திற்கு போலீஸ் பாதுகாப்பு அவசியம் :மாஜி எம்.எல்.ஏ., கோரிக்கை
அண்ணமங்கலம் கிராமத்திற்கு போலீஸ் பாதுகாப்பு அவசியம் :மாஜி எம்.எல்.ஏ., கோரிக்கை
அண்ணமங்கலம் கிராமத்திற்கு போலீஸ் பாதுகாப்பு அவசியம் :மாஜி எம்.எல்.ஏ., கோரிக்கை
அண்ணமங்கலம் கிராமத்திற்கு போலீஸ் பாதுகாப்பு அவசியம் :மாஜி எம்.எல்.ஏ., கோரிக்கை
ADDED : அக் 06, 2011 01:08 AM
அவலூர்பேட்டை : தேர்தலின் போது அண்ணமங்கலம் கிராமத்திற்கு கூடுதல் போலீஸ்
பாதுகாப்பு தேவை என முன்னாள் எம்.எல்.ஏ., செஞ்சி ஏழுமலை பேசினார்.
மேல்மலையனூர் பி. டி.ஓ., அலுவலக வளா கத்தில் உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு
அனைத்து கட்சி பிரதிநிதிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. தேர்தல் நடத்தும்
அலுவலர் நீலவேணி தலைமை தாங்கினார். கிராம ஊராட்சி பி.டி.ஓ., நடராஜன்
முன்னிலை வகித்தார். துணை பி.டி.ஓ., சண்முகம் வரவேற்றார். தேர்தல்
பிரசாரம் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை நடத்த வேண்டும். கோவில்,
மசூதி, சர்ச் மற்றும் பொது இடங்களில் சின்னங்களை வரையக்கூடாது உள்ளிட்ட
தேர்தல் விதி முறைகளை விளக்கி வளத்தி இன்ஸ்பெக்டர் ராஜா பேசினார். இதில்
முன்னாள் எம். எல்.ஏ.,க்கள் செஞ்சி ஏழுமலை, தமிழ்மொழி ராஜதத்தன், சேர்மன்
அன்பழகன், ஒன்றிய செயலாளர்கள் தி.மு.க., நெடுஞ்செழியன், ம.தி.மு.க.,
சுப்பிரமணியன் , தே.மு.தி.க., சின்னதுரை உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னாள் எம்.எல்.ஏ., ஏழுமலை பேசுகையில், தேர்தலின்போது அண்ணமங்கலம்
கிராமத்திற்கு சென்னையிலிருந்து ரவுடிகள் வந்து கத்தியை காட்டி மிரட்டி
அராஜகம் செய்வது வழக்கம். உள்ளூர் வாசிகள் யாருக்கு ஓட்டு போட வேண்டும் என
விரும்புகின்றனரோ அவர்களுக்கு ஓட்டு போட அனுமதிக்க வேண்டும். வரும் 17ம்
தேதி முதல் தேர்தல் முடியும் வரை அண்ணமங்கலம் கிராமத்திற்கு கூடுதல் போலீஸ்
பாதுகாப்பு அவசியம் என வலியுறுத்தினார்.


