Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ஹசாரேவால் அஹிம்சைக்கு வலிமை :மோடி

ஹசாரேவால் அஹிம்சைக்கு வலிமை :மோடி

ஹசாரேவால் அஹிம்சைக்கு வலிமை :மோடி

ஹசாரேவால் அஹிம்சைக்கு வலிமை :மோடி

ADDED : ஆக 28, 2011 12:49 PM


Google News
ஆமதாபாத் : அன்னா ஹசாரே தலைமை ஏற்று நடத்தி இருக்கும் ஊழலுக்கு எதிரான இந்த போராட்டம் அஹிம்சைக்கு புதிய வலிமை சேர்த்துள்ளதாக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இந்தியா, அஹிம்சையின் ஆனிவேராக விளங்குவதை வரலாறு மட்டுமின்றி தற்போதைய போராட்டமும் நிரூபித்துள்ளதாகவும் அவர் புகழாறம் சூட்டி உள்ளார். மேலும் அவர் கூறுகையில், சுதந்திர போராட்டம் நடைபெற்றதற்கு என ஆதாரம் உள்ளது என நம்மில் பலரும் கேட்டு வருகின்றனர்; ஆனால் அதை நிரூபிக்கும் விதமாக ஊழலுக்கு எதிரான போராட்டம் அமைந்துள்ளது; பலரும் கையாண்டும் சிறந்ததாகவும் நினைக்கும் பயங்கரவாதத்தை விட அஹிம்சை வலிமையானது என இந்த போராட்டம் நிரூபித்துள்ளது; இந்தியா வலிமையானதாகவும், மனிதநேயம் மிக்கதாகவும் உள்ளதற்கு இதுவே உதாரணம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us