/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க மனித நேய கட்சி கோரிக்கைஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க மனித நேய கட்சி கோரிக்கை
ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க மனித நேய கட்சி கோரிக்கை
ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க மனித நேய கட்சி கோரிக்கை
ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க மனித நேய கட்சி கோரிக்கை
ADDED : ஆக 06, 2011 02:00 AM
ஓசூர்: 'ஓசூர் ஜாமியா மசூதிக்கு சொந்தமான சொத்துகளை தனியார் ஆக்கிரமிப்பில் உள்ளது; இந்த சொத்துகளை மீட்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் ' என மனித நேய மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது.
ஓசூர் நகர மனித நேய மக்கள் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் நகர தலைவர் முகமது அசர் தலைமையில் நடந்தது. மாவட்ட தலைவர் அல்தாப் அகமத், மாவட்ட துணைத்தலைவர் அமீன் சிக்கந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அலாவுதீன் வரவேற்றார். மாவட்ட துணை செயலாளர் சிக்கந்தர், மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் முகமது சுபேர், ம.ம.க., நகர செயலாளர் சிராஜ் பாஷா, நகர செயலாளர் ஏஜாஸ் கான், சாதிக்கான், ஷபில்லா உள்பட பலர் கலந்து கொண்டனர். மாநில துணை செயலாளர் சாதிக் பாஷா, மாவட்ட செயலாளர் நவுஷாத் ஆகியோர் பேசினர். 'ஓசூர் ஜாமியா மஸ்ஜித்துக்கு சொந்தமான ஆக்கிரமிப்பில் உள்ள சொத்துகளை மீட்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஓசூர் ஜாபர் தெருவில் குடிநீர் குழாய்களில் சாக்கடை நீர் கலப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு அப்பகுதி மக்கள், குழந்தைகளுக்கு மர்ம நோய் பரவுகிறது. நகராட்சி நிர்வாகம் குடிநீருடன் சாக்கடை நீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.வழிப்பாட்டு தலங்களில் இருந்து 100 மீட்டர் தொலைவிற்குதான் டாஸ்மாக் கடைகள் இருக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. ஆனால், ரயில்வே ஸ்டேஷன் சாலையில் மசூது அருகில் டாஸ்மாக் கடை செயல்படுகிறது. இந்த கடையை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்' உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றினர்.