குண்டு வெடிப்பில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.7 லட்சம்
குண்டு வெடிப்பில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.7 லட்சம்
குண்டு வெடிப்பில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.7 லட்சம்

மும்பை : 'மும்பை குண்டு வெடிப்பில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு, தலா ஐந்து லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும்' என, மகாராஷ்டிர அரசு தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிர முதல்வர் பிரித்விராஜ் சவான் கூறியதாவது: குண்டு வெடிப்பு சம்பவங்களில் உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும், தலா ஐந்து லட்சம் ரூபாய் வழங்கப்படும். காயமடைந்தோரின் குடும்பத்துக்கு, தலா 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். குண்டு வெடிப்பில் காயமடைந்தோருக்கு, சில தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. குண்டு வெடிப்பு சம்பவத்திலிருந்து விரைவாக மீண்ட மும்பை மக்களுக்கு, பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். பயங்கரவாதத்தை ஒழிப்பதாக, ஒவ்வொருவரும் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு பிரித்விராஜ் சவான் கூறினார்.
மத்திய அரசு உதவி : பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில், 'குண்டு வெடிப்பில் பலியான ஒவ்வொருவரின் குடும்பத்துக்கும், மத்திய அரசு சார்பில் தலா இரண்டு லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்கப்படும். கடுமையாக காயம் அடைந்தவர்களுக்கு, தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.