ADDED : அக் 07, 2011 10:33 PM
சிவகாசி : ''கட்சி பாகுபாடின்றி தொண்டாற்றுவேன்,'' என, மாவட்ட கவுன்சில் ம.தி.மு.க., வேட்பாளர் சீனிவாசன் கூறினார்.
சிவகாசி ஒன்றியம் மாவட்ட 5வதுவார்டு கவுன்சிலர் பதவிக்கு ம.தி.மு.க.,சார்பில் போட்டியிடும் அவர் , சுந்தர்ராஜபுரம்,பேராபட்டி கிராமங்களில்ஓட்டு சேகரித்தபோது கூறியதாவது: பேராபட்டியில் ஆயிரம் ரேஷன் கார்டுகள் உள்ளன. இங்கு ரேஷன் கடை இல்லாததால், இவர்கள் அனைவரும் 3 கி.மீ., தொலைவில் உள்ள, சுந்தரராஜபுரத்தில் உள்ள ரேஷன் கடைக்கு நடந்து சென்று பொருட்களை வாங்குகின்றனர். மக்களின் சிரமங்களை போக்க பேராபட்டியில் ரேஷன் கடை அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.மக்களின் அடிப்படை பிரச்னைகளான தண்ணீர், வாறுகால்,தெருவிளக்கு, சாலைவசதிகளை உடனடியாக தீர்க்க நடவடிக்கை எடுப்பேன். ம.தி.மு.க., பொதுச் செயலாளர் வைகோ, சிவகாசி தொகுதி எம்.பி.,யாக இருக்கும் போது, கட்சி பாகுபாடின்றி ஊனமுற்றோர் மறுவாழ்வு முகாம்,மஞ்சள்காமாலை தடுப்பு ஊõசி முகாம் , மத்திய அரசின் பல நல்ல திட்டங்களை செயல்படுத்தியுள்ளார்.என்னை வெற்றி பெறச் செய்தால் அவரையே வழிகாட்டியாக கொண்டு, கட்சி பாகுபாடு இன்றி மக்கள் தொண்டாற்றுவேன், என்றார். இலக்கிய அணி புரவலர் கோல்டன் சீனிவாசன், ஒன்றிய கவுன்சில் 31வது வார்டு வேட்பாளர் ராஜேந்திரன்,ஒன்றிய செயலாளர் பங்காருசாமி கலந்து கொண்டனர்.


