ADDED : அக் 12, 2011 11:32 PM
பெரம்பலூர்: வேப்பந்தட்டை அருகே கணவரை காணவில்லை என அவரது மனைவி மங்கலமேடு போலீஸில் புகார் செய்தார்.பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே எறையூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்லதுரை (59).
இவர் கடந்த 9ம் தேதி வெளியில் சென்றுவிட்டு வருவதாக தெரிவித்துவிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் செல்லதுரையை தேடியும் கிடைக்காததால் செல்லதுரை மனைவி செல்வகுமாரி (40) நேற்று மங்கலமேடு போலீஸில் புகார் செய்தார். புகாரின்பேரில், மங்கலமேடு இன்ஸ்பெக்டர் செல்வம் வழக்குப்பதிந்து விசாரிக்கிறார்.


