ADDED : செப் 03, 2011 12:19 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட நிர்வாகிகளுக்கான தேர்தல் நடந்தது.
தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில செய்தி தொடர்பாளர் சீனிவாசன் தேர்தல் அதிகாரியாகவும், கிருஷ்ணகிரி முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் முனுசாமி, கிருஷ்ணகிரி மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஆனந்தகுமார், மேல்கொட்டாய் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கோபாலகண்ணன் ஆகியோர் தேர்தல் மேற்பார்வையாளராக செயல்பட்டனர்.
இதில், கிருஷ்ணகிரி வருவாய் மாவட்ட தலைவராக சந்தூர் பிரபாகர், செயலாளராக சிங்காரப்பேட்டை அன்பழகன், பொருளாளராக பர்கூர் அரசு, அமைப்பு செயலாளராக இம்மிடிநாயக்கனபள்ளி வாசுதேவன், கிருஷ்ணகிரி கல்வி மாவட்ட தலைவராக மகனூர்பட்டி கருணாநிதி, ஓசூர் கல்வி மாவட்ட தலைவராக சென்னசந்திரம் செந்தில்குமாரன் ஆகியோர் உட்பட கிருஷ்ணகிரி மற்றும் ஓசூர் கல்வி மாவட்டங்களுக்கு 9 பொறுப்பாளர்களும் தேர்வு செய்யப்பட்டனர்.


