/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/மக்கள் பிரச்னைக்கு குரல் கொடுப்பேன் ம.தி.மு.க., வேட்பாளர் உறுதிமக்கள் பிரச்னைக்கு குரல் கொடுப்பேன் ம.தி.மு.க., வேட்பாளர் உறுதி
மக்கள் பிரச்னைக்கு குரல் கொடுப்பேன் ம.தி.மு.க., வேட்பாளர் உறுதி
மக்கள் பிரச்னைக்கு குரல் கொடுப்பேன் ம.தி.மு.க., வேட்பாளர் உறுதி
மக்கள் பிரச்னைக்கு குரல் கொடுப்பேன் ம.தி.மு.க., வேட்பாளர் உறுதி
ADDED : அக் 07, 2011 10:22 PM
திண்டுக்கல் : ''மக்கள் பிரச்னைகளை எனது பிரச்னையாக கருதி செயல்படுவேன்,'' என, திண்டுக்கல் நகராட்சி 4 வது வார்டு ம.தி.மு.க., வேட்பாளர் பி.ஆறுமுகம் கூறினார்.திண்டுக்கல் பிள்ளையார்பாளையம், மருதாணிக்குளத்தில் அவர் பேசியது:பொது வாழ்வில் தூய்மை, அரசியலில் நேர்மை என்ற வைகோவின் தாரக மந்திரத்தை பின்பற்றுவேன்.
ஊழலற்ற நிர்வாகம் அமைய நகராட்சி தலைவருக்கு செல்வராகவனுக்கும், எனக்கும் வாய்ப்பளியுங்கள். பிள்ளையார்பாளையம் பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தருவேன். சாக்கடை, குப்பைகள் அகற்றுவதற்கும், எரியாத தெரு விளக்குகளை சீரமைத்து பிரகாசிக்க செய்வேன். அனைத்து ரோடுகளையும் சிமென்ட் ரோடாக அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். முக்கியமான பகுதிகளில் சோடியம் விளக்குகள் அமைக்கப்படும். மருதாணிக்குளத்தில் சோடியம் விளக்கு அமைப்பேன். தெருக்குழாய்கள் அமைக்கப்படும். குறுகிய சாலைகள் அனைத்தும் சிமென்ட் ரோடாக மாற்றப்படும். ஆர்.எம்.காலனி, 8, 9, 10 வது குறுக்குத் தெருவில் உள்ள அனைத்து ரோடுகளும் சிமென்ட் ரோடாக மாற்ற முயற்சி எடுப்பேன். எரியாத தெரு விளக்குகளை சீரமைத்தும், புதிய விளக்குகள் அமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும். ஆர்.எம்.காலனியில் நமது பகுதிக்கு ஒதுக்கப்பட்ட பொது இடத்தில், விளையாட்டு பூங்கா, நூலகம் அமைப்பதற்கு முயற்சி செய்வேன். அனைத்து கோயில்களுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு தர முயற்சி செய்வேன். மக்கள் குறைகளை தெரிவிக்க ஒவ்வொரு வீட்டிற்கும் என்னுடைய விலாசம், மொபைல் எண் அளிக்கப்படும். மத்திய, மாநில அரசுகள் வழங்கும் அனைத்து இலவச திட்டங்களும், உதவிகளும் மக்களுக்கு பெற்றுத் தருவேன், என்றார்.


