Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/சுகாதார வளாக சீரமைப்பு திட்ட மதிப்பீடு தயார்

சுகாதார வளாக சீரமைப்பு திட்ட மதிப்பீடு தயார்

சுகாதார வளாக சீரமைப்பு திட்ட மதிப்பீடு தயார்

சுகாதார வளாக சீரமைப்பு திட்ட மதிப்பீடு தயார்

ADDED : ஆக 18, 2011 09:30 PM


Google News
தேவதானப்பட்டி:தேனி மாவட்டத்தில் கிராம ஊராட்சிகளில் பயன்பாடு இல்லாமல் இருக்கும் சுகாதார வளாகங்களை சரி செய்ய திட்ட மதிப்பீடு தயார் செய்யப்படுகிறது.தேனி மாவட்டத்தில் உள்ள 130 கிராம ஊராட்சிகளில் உள்ள மகளிர் சுகாதார வளாகங்கள் பலவற்றில் போதிய அளவு தண்ணீர் வசதி இல்லை.

பராமரிக்க பணியாளர்கள் இல்லை. பலவற்றில் கோப்பைகள், பைப்லைன்கள் சேதமடைந்துள்ளது. இது போன்ற பல்வேறு காரணங்களால் பயன்பாடு இல்லாமல் உள்ள சுகாதார வளாகங்களின் நிலை பற்றி ஆய்வு செய்யப்பட்டது. இவற்றை சரி செய்து பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்காக சுகாதார வளாகங்களில் சேதமதிப்பீடுகளை ஒன்றிய பொறியாளர்கள் தயார் செய்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us