Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/அட்டாக்பாண்டி கூட்டாளிகள் ஜாமின் மனு தள்ளுபடி

அட்டாக்பாண்டி கூட்டாளிகள் ஜாமின் மனு தள்ளுபடி

அட்டாக்பாண்டி கூட்டாளிகள் ஜாமின் மனு தள்ளுபடி

அட்டாக்பாண்டி கூட்டாளிகள் ஜாமின் மனு தள்ளுபடி

ADDED : ஆக 18, 2011 08:40 PM


Google News
மதுரை: மதுரையில் வீடு அபகரிப்பு வழக்கில் தி.மு.க., வேளாண் விற்பனை குழு முன்னாள் தலைவர் அட்டாக்பாண்டியின் கூட்டாளிகள் இருவரது ஜாமின் மனுவை மாஜிஸ்திரேட் கோர்ட் தள்ளுபடி செய்தது. மதுரை சேர்ந்த கல்பனா என்பவருக்கு சொந்தமான வீட்டை அபகரித்து 'சிடி' கடை, கழிப்பறை கட்டியதாக தி.மு.க., நிர்வாகிகள் மாரிமுத்து, திருச்செல்வம் மற்றும் அட்டாக்பாண்டியை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

மாரிமுத்து, திருச்செல்வம் ஜாமின் கோரி முதலாவது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மனு செய்தனர். அவர்களை ஜாமினில் விட அரசு தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. அதை ஏற்று ஜாமின் மனுவை மாஜிஸ்திரேட் (பொறுப்பு) உமா மகேஸ்வரி தள்ளுபடி செய்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us