Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/மும்பை குண்டு வெடிப்பில் ஆறு பேருக்கு தொடர்பு?

மும்பை குண்டு வெடிப்பில் ஆறு பேருக்கு தொடர்பு?

மும்பை குண்டு வெடிப்பில் ஆறு பேருக்கு தொடர்பு?

மும்பை குண்டு வெடிப்பில் ஆறு பேருக்கு தொடர்பு?

ADDED : ஜூலை 19, 2011 08:45 PM


Google News
மும்பை: மும்பையில் கடந்த வாரம், மூன்று இடங்களில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில், ஆறு பேர் சம்பந்தப்பட்டுள்ளதாக, புலனாய்வு அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

மும்பையில் கடந்த 13ம்தேதி ஓப்ரா ஹவுஸ், ஜவேரி பஜார், தாதர் ஆகிய இடங்களில் குண்டு வெடித்ததில், 20 பேர் பலியாகினர். இந்த குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு, இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. குஜராத் மற்றும் கோல்கட்டாவுடன் தொடர்புடைய ஆறு புதிய பயங்கரவாதிகள், இந்த சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாகவும், அவர்கள் இரண்டு பேராக சென்று ஒவ்வொரு இடங்களிலும் குண்டு வைத்துள்ளதாகவும், தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். ஜவேரிபஜாரில் டிபன்பாக்ஸ் குண்டு வெடித்துள்ளது. மற்ற இடங்களில் எந்த முறையில் குண்டு வெடித்துள்ளது என்பது இன்னும் புலனாகவில்லை என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us