/உள்ளூர் செய்திகள்/கடலூர்/அக்மார்க் பொருட்களை வாங்க வேளாண் அலுவலர் அறிவுரைஅக்மார்க் பொருட்களை வாங்க வேளாண் அலுவலர் அறிவுரை
அக்மார்க் பொருட்களை வாங்க வேளாண் அலுவலர் அறிவுரை
அக்மார்க் பொருட்களை வாங்க வேளாண் அலுவலர் அறிவுரை
அக்மார்க் பொருட்களை வாங்க வேளாண் அலுவலர் அறிவுரை
ADDED : ஆக 09, 2011 02:45 AM
பண்ருட்டி : அக்மார்க் பொருட்களை வாங்கி பயனடைய நுகர்வோர்களுக்கு வேளாண்மை அலுவலர் (ரசாயனம்) பிரேமலதா அறிவுருத்தியுள்ளார்.அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு :-கலப்பட உணவு பொருட்களைத் தவிர்த்து தரமான உணவு பொருட்களை வாங்க வேண்டும்.
எந்த உணவுபொருளையும் பார்த்து தெரிந்து வாங்க வேண்டும். தவறான முறையில் மற்றும் நச்சுத் தன்மை உள்ள பொருட்களைக் கொண்டு பேக்கிங் செய்யப்பட் உணவு பொருட்களை தவிர்க்க வேண்டும். உற்பத்தியாளர் முகவரியுடன் கூடிய பேக்கிங் செய்யப்பட்ட பொருட்களை வாங்க வேண்டும்.உற்பத்தி செய்யப்பட்ட நாள், பயன்படுத்துவதற்கான கால அளவு போன்றவற்றை பார்த்து வாங்குவதன் மூலம் நாள்பட்ட தரம் குன்றிய பொருட்களை தவிர்க்கலாம்.உற்பத்தி நிலையிலேயே பரிசோதனை செய்யப்பட்டு 'அக்மார்க்' அரசின் தரமுத்திரை பெற்ற உணவு பொருட்களை வாங்குவதன் மூலம் கலப்படத்தை முழுமையாக தவிர்க்கலாம்.நுகர்வோர் அனைவரும் அக்மார்க் தரசான்று பெற்ற உணவு பொருட்களையே வாங்கி பயன்படுத்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.இவ்வாறு வேளாண்மை அலுவலர் பிரேமலதா அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


