/உள்ளூர் செய்திகள்/கன்னியாகுமரி/கன்னியாகுமரியை அழகூட்டும் சுற்றுலா தலங்கள் : வில்லுக்குறி அருகே முளம்சல்லி ஓடை நீர்வீழ்ச்சிகன்னியாகுமரியை அழகூட்டும் சுற்றுலா தலங்கள் : வில்லுக்குறி அருகே முளம்சல்லி ஓடை நீர்வீழ்ச்சி
கன்னியாகுமரியை அழகூட்டும் சுற்றுலா தலங்கள் : வில்லுக்குறி அருகே முளம்சல்லி ஓடை நீர்வீழ்ச்சி
கன்னியாகுமரியை அழகூட்டும் சுற்றுலா தலங்கள் : வில்லுக்குறி அருகே முளம்சல்லி ஓடை நீர்வீழ்ச்சி
கன்னியாகுமரியை அழகூட்டும் சுற்றுலா தலங்கள் : வில்லுக்குறி அருகே முளம்சல்லி ஓடை நீர்வீழ்ச்சி
ADDED : செப் 28, 2011 12:42 AM
வில்லுக்குறி : மாம்பழத்துறையாறு அணையின் மேல்பகுதியில் முளம்சல்லி ஓடை நீர்வீழ்ச்சி சுற்றுலா பயணிகளை கவரும் விதத்தில் உள்ளது.
நாகர்கோவில் - திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் வில்லுக்குறி பாலத்தின் இருந்து சுமார் 3 கி.மீ., தூரத்தில் மாம்பழத்துறையாறு அணை அமைந்துள்ளது. இந்த அணை கடந்த நவம்பர் மாதம் திறப்பு விழா கண்டது. இந்த அணைக்கு நாளுக்கு நாள் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. அணை பகுதியில் சிறுவர்களை கவரும் வகையில் பார்க் வசதி அமைக்கப்பட்டுள்ளது. அணை பகுதியில் வீசும் இயற்கை காற்று சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்கிறது. தற்போது இந்த அணைக்கு பெருமை சேர்க்கும் வகையில் அணையின் உள்பகுதியில் இயற்கையாகவே உள்ள முளம்சல்லி ஓடை நீர்வீழ்ச்சி சுற்றுலா வரும் மக்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகிறது.
அணையின் மேல் பகுதியில் சுமார் ஒரு கி.மீ., தூரத்தில் இந்த நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. இதனை சுற்றுலா தலமாக மாற்ற வேண்டுமென பாசனத்துறை நீர்வாகிகள் கோரிக்கை வைத்தனர். இதை தொடர்ந்து பத்மனாபபுரம் ஆர்.டி.ஓ., மோகனசந்திரன் தலைமையில் அதிகாரிகள் கடந்த சில மாதங்களுக்கு முன் முளம்சல்லி ஓடையை பார்வையிட்டு மாவட்ட நிர்வாகத்திடம் அறிக்கை சமர்ப்பித்தனர். உலக சுற்றுலா தினவிழா கொண்டாடும் இவ்வேளையில் முளம்சல்லி ஓடை நீர்வீழ்ச்சியில் சுற்றுலா மேம்பாட்டிற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது.