வத்திராயிருப்பு : வத்திராயிருப்பு ஆற்றங்கரை ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேக
தினத்தையொட்டி வருஷாபிஷேகம் நடந்தது.
காலையில் மூலவருக்கும்,
உற்சவருக்கும் திருமஞ்சன வழிபாடு , மூலவருக்கு வெண்ணெய் காப்பு அலங்காரம்,
பஜனை வழிபாடு நடந்தது. பூரண கும்பத்திற்கு விஷேஷ பூஜைகள் செய்யப்பட்டு,
கோபுர கலசத்திற்கு புனிதநீர் ஊற்றப்பட,பக்தர்கள் மீது புனிதநீர்
தெளிக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். ஏற்பாடுகளை பக்தசபா
நிர்வாகி வைகுண்டராமன் செய்திருந்தனர்.


