/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/பதிவேட்டில் பெயர் வேண்டும் வம்சராஜ் நாயக்கர்கள் தீர்மானம்பதிவேட்டில் பெயர் வேண்டும் வம்சராஜ் நாயக்கர்கள் தீர்மானம்
பதிவேட்டில் பெயர் வேண்டும் வம்சராஜ் நாயக்கர்கள் தீர்மானம்
பதிவேட்டில் பெயர் வேண்டும் வம்சராஜ் நாயக்கர்கள் தீர்மானம்
பதிவேட்டில் பெயர் வேண்டும் வம்சராஜ் நாயக்கர்கள் தீர்மானம்
ADDED : ஆக 28, 2011 11:48 PM
துடியலூர் : 'பதிவேட்டில் சமுதாய பெயரை இடம் பெறச் செய்ய தமிழக அரசு
நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, வம்சராஜ் நாயக்கர் சங்கத்தினர் தீர்மானம்
நிறைவேற்றியுள்ளனர். தமிழ்நாடு வம்சராஜ் நாயக்கர் மாநில சங்க கூட்டம்
துடியலூரில் நடந்தது. நிகழ்ச்சிக்கு, அப்பநாயக்கன்பாளையம் கிளை தலைவர்
ராஜன் தலைமை வகித்தார். மாநில தலைவர் கண்ணன், செயலாளர்
ரவிக்குமார்,பொருளாளர் கணேசன் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், 'பல்வேறு வகையாக பெறப்பட்டுள்ள ஜாதி சான்றிதழை ஒன்றாக இணைத்து
வம்சராஜ் நாயக்கர் என அரசு மாற்றித் தர வேண்டும். தமிழகத்தில் வம்சராஜ்
நாயக்கர் சமுதாய மக்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்க
வேண்டும். தனி வாரியம் அமைத்து அரசு உதவிகளை வழங்க வேண்டும்' என்பது
உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில், இச்சமுதாயத்தின்
ஆந்திர மாநில தலைவர் சத்தியம், கர்நாடகா மாநில தலைவர் கிருஷ்ணப்பா,
பசுவபரீங்கேஸ்வரா சுவாமிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


